சிவாங்கி மற்றும் புகழ் சேர்ந்து நடிக்கும் திரைப்படம்!! ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்!!

Photo of author

By CineDesk

சிவாங்கி மற்றும் புகழ் சேர்ந்து நடிக்கும் திரைப்படம்!! ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். இவர் இந்திய நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ்த் தொலைக்காட்சித் துறையில் பணியாற்றுகிறார். இவரின் காமெடி பட்டி தொட்டியெங்கும் ஒலித்து வரும். வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மேலும் தனது அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் குமார் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் அஜித் குமார் நடிப்பில் அண்மையில் உருவாகிவரும் வலிமை திரைப்படத்தில் புகழும் நடித்துள்ளார்.

இந்த வகையில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமாக இருப்பவர் சிவாங்கி கிருஷ்ணகுமார். இவர் பின்னணி பாடகி மற்றும் நகைச்சுவை நடிகை ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் சீசன் 7ல் விஜய் தொலைக்காட்சியின் பங்கேற்றார். சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொண்டு இறுதி சுற்றுக்கு முந்திய சுற்றிவர கலந்து கொண்டார். பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் அதிகமாக ரசிகர்களை கவந்தவர். அந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. இதில் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிபில் டான் என்ற திரைப்படத்தில் துணை நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை சிவகார்த்திகேயனுடன் சிவாங்கி இணைந்து நடிக்கும் முதல் திரைப்படமாகும்.

இந்த நிலையில் புகழ் மற்றும் சிவாங்கி இவர்கள் இருவரும் இணைந்து தமிழில் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடிக்க உள்ளனர்.1972ல் திரைக்கு வந்த திரைப்படம் காசேதான் கடவுளடா. இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை 49 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரீமேக் செய்ய உள்ளனர். மேலும் இந்த காசேதான் கடவுளடா திரைப்படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்குகிறார். இப்படத்தில் மிர்ச்சி சிவா, யோகிபாபு, ஊர்வசி, பிரியா ஆனந்த் ஆகிய அனைவரும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இதைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் பிரபலங்கள் நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதை தொடர்ந்து படத்தில் சிவாங்கி மற்றும் புகழ் இருவரும் நடிக்க உள்ளனர் என தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் புகழ், இயக்குனர் மற்றும் ஹீரோவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் அளவில் அதிகரித்துள்ளது.