Cinema, District News, National, State

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் சிவாங்கி!! இப்போ எந்த படத்துல நடிக்கராங்க தெரியுமா??

Photo of author

By CineDesk

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் சிவாங்கி!! இப்போ எந்த படத்துல நடிக்கராங்க தெரியுமா??

சிவாங்கி கிருஷ்ணகுமார் பின்னணி பாடகி மற்றும் நடிகை. 2019 ஆம் ஆண்டில், ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட சூப்பர் சிங்கர் 7 என்ற பாடல் போட்டியில் பங்கேற்றார். பின்பு இறுதி சுற்றிக்கு செல்லும்போது போட்டியிலிருந்து வெளியேறினார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், குக்கு வித் கோமலி என்ற நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த சமையல் நிகழ்ச்சியில் பெரிதும் ரசிகர்களை கவர்த்ந்து உலக அளவிலாவிய ரசிகர் கூடத்தை சேகரித்தார்.

2021 ஆம் ஆண்டில் அவர் மூன்று விருதுகளை வென்றார் – பிளாக்ஷீப் டிஜிட்டல் விருதுகளின் தி என்டர்டெயினிங் ஸ்டார் பெண், ரியாலிட்டி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பெண் பிஹைண்ட்வுட்ஸ் தங்க சின்னங்கள் மற்றும் விஜய் தொலைக்காட்சி விருதுகளால் அஸ்வின் குமார் லட்சுமிகாந்தனுடன் இந்த ஆண்டின் பிரபலமான ஜோடி போன்ற விருதுகளை வென்றார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்பும் கிடைத்துள்ளது. அவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் துணை நடிகையாக டான் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது மிர்ச்சி சிவா, யோகி பாபு நடிப்பில் காசேதான் கடவுளடா திரைப்படத்தை ரீமேக் செய்ய உள்ளனர்.அந்த படத்தின் இயக்குனர் ஆர். கண்ணன். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. இதில் மிர்ச்சி சிவா, யோகி பாபுவுடன் இணைந்து பிரியா ஆனந்த், சிவாங்கி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர் என் தகவல் வந்துள்ளது. இந்த தகவல் சிவாங்கி ரசிகர்களை மேலும் சந்தோசத்தில் ஆழ்த்தி உள்ளது.

முதல்வர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் மு.க.ஸ்டாலின்!! மக்களைக் கவர்ந்த முதல்வர் என பாராட்டு!!

ஆப்பிள் வழங்கும் சூப்பரான ஆஃபர்!! மாணவர்களுக்கு ஜாக்பாட் !! இலவச ஏர்போட்ஸ்!!

Leave a Comment