சுடுகாடுகள் தயார் – தமிழகம் முழுவதும் பரபரப்பு

Photo of author

By Parthipan K

சுடுகாடுகள் தயார் – தமிழகம் முழுவதும் பரபரப்பு

Parthipan K

Sivarathiri-மயாணக் கொள்ளை திருவிழா

சுடுகாடுகள் தயார் – தமிழகம் முழுவதும் பரபரப்பு

வருகின்ற 21 ஆம் நாள் சிவராத்திரி பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வருகின்ற வெள்ளிக்கிழமை (21.02.2020) கன்னியாகுமரி ஆட்சியரால் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை முடிந்த பின்பு ஞாயிறு அன்று தமிழகம் முழுவதும் உள்ள காளி கோவில்களில் மயாணக் கொள்ளை என்ற விழாவும் கொண்டாடப்பட உள்ளது.

மயாணக் கொள்ளை திருவிழாவானது தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும், நகரங்களிலும் வெகு விமரிசையாக காலந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் மயாணக் கொள்ளை திருவிழா சிறப்பாக நடைபெற மயாணங்களை தயார்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மிகவும் அமைதியான முறையிலே திருவிழாவை நடத்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலே ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.