மீண்டும் இயக்குனராகும் எஸ்.ஜே.சூர்யா!. அட ஹீரோ யார் தெரியுமா?..

Photo of author

By அசோக்

மீண்டும் இயக்குனராகும் எஸ்.ஜே.சூர்யா!. அட ஹீரோ யார் தெரியுமா?..

அசோக்

sj suriya

மீண்டும் இயக்குனராகும் எஸ்.ஜே.சூர்யா!. அட ஹீரோ யார் தெரியுமா?..

இயக்குனர் வசந்திடம் சினிமா கற்றவர் எஸ்.ஜே.சூர்யா, சில படங்களில் உதவியாளராக வேலை செய்துவிட்டு சும்மா இருந்தவரை அஜித் அழைத்து பட வாய்ப்பு கொடுத்தார். அப்படி உருவான படம்தான் வாலி. அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். தேவாவின் இசையில் பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

படம் வெளியான போது அடல்ட் படம் போல இருக்கிறது என கமெண்ட்ஸ்கள் வந்தாலும் படம் ஹிட் அடித்துவிட்டது. எனவே, எஸ்.ஜே.சூர்யாவுக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. அப்படி உருவான குஷி திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் தான் இயக்கும் படங்களில் தானே ஹீரோவாக நடிக்க துவங்கினார் எஸ்.ஜே.சூர்யா.

அப்படி அவர் நடித்து வெளியான நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். சில படங்களில் ஹீரோவாக நடித்த எஸ்.ஜே.சூர்யா ஒரு கட்டத்தில் வில்லனாக நடிக்க துவங்கினார். அதுதான் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

sj suriya
sj suriya

விஜயின் மெர்சல் துவங்கி சியான் விக்ரமின் வீர் தீர சூரன் வரை பல படங்களிலும் நடித்துவிட்டார். ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் உருவான மார்க் ஆண்டனி படத்தில் அசத்தலாக நடித்து ரசிகர்களை கவந்தார். இப்போது கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராக எஸ்.ஜே.சூர்யா மாறிவிட்டார்.

இந்நிலையில், மீண்டும் எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் அவதாரம் எடுக்க முடிவு செய்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பே கில்லர் என்கிற கதையை அவர் எழுதினார். இந்த படத்தை அவரே தயாரித்து, இயக்கி, நடிக்க முடிவு செய்துள்ளார். எனவே, இன்னும் ஒரு வருடத்திற்கு எந்த புதிய படத்திற்கும் அவரின் கால்ஷீட் கிடைக்காது என்கிறார்கள்.