முகுந்த் வரதராஜரின் கதைக்கு எஸ்கே தேர்ந்தெடுக்கப்படவில்லை!! கமல் மனதில் முதலில் தோன்றியவர் யார்!!

Photo of author

By Gayathri

கமல்ராஜ் ப்ரொடக்சன் தயாரிப்பில் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் தான் அமரன். இத்திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜ் அவர்களின் சுய வரலாற்று படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகி மக்களை மிகவும் நெகிழ செய்தது. இப்ப படத்தினை கண்ட ரசிகர்கள் பலரும் கண்ணீரோடும் மன நெகிழ்வோடும் தான் திரையரங்குகளை விட்டு வெளியே வந்தனர்.

இந்த படத்தினை தயாரிப்பதற்கு முன் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் விக்ரம் திரைப்படத்தினை இவரே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரின் உடைய படத்தினையும் தயாரிக்க கமலவர்கள் முடிவெடுத்திருந்தார்.

ஆனால் சிம்புவின் படம் மட்டும் தற்பொழுது கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாக்கியுள்ளன. சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல் தயாரிப்பில் உருவான அமரன் படம் தற்பொழுது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த அமரன் திரைப்படத்தில், இந்திய ராணுவத்தில் மேஜராக இருந்து தனது டீமை வழிநடத்தி தீவிரவாதிகள் பலரை சுட்டுக்கொன்ற முகுந்த் வரதராஜன் பற்றிய கதை இது. தீவிரவாதிகளின் முக்கிய தலைவர்களை சுட்டு கொன்றவர் முகுந்த் வரதராஜன். அந்த போரில் தீவிரவாதிகள் சுட்டதில் சில குண்டுகள் அவரின் உடலில் பாய்ந்து அவர் மரணமடைந்தார் என்பதை அழகாக படமாகி காட்டியுள்ளனர். மேலும் இவர் எவ்வாறு ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் எவ்வாறு சிறப்பாக பணிபுரிந்தார். மேலும் அவருடைய குடும்ப வாழ்க்கை என முகுந்த் வரதராஜ் அவர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நினைவுகளை அமரன் திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.

முகுந்த் வரதராஜன் மனைவியிடம் ராஜ்குமார் பெரியசாமி பேசும்போது முகுந்த் தமிழின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தது தெரியவந்திருக்கிறது. எனவே, ஒரு தமிழ் நடிகரை நடிக்க வைத்தால் சரியாக இருக்கும் என அவருக்கு தோன்றியது. அந்த கணமே அவருக்கு நினைவுக்கு வந்தது சிவகார்த்திகேயன்தானாம். சிவகார்த்திகேயனும் கதையை கேட்டு மிகவும் ஆர்வமாகி ஒரே நாளில் நடிக்க சம்மதித்துவிட்டாராம்.

இவ்வாறாக தான் கமலஹாசன் தயாரிப்பில் உருவான அமரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.