டாக்டர் திரைப்படம், ரசிகர்களின் விமர்சனம் என்ன?

0
274
Doctor movie poster

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் திரைப்படம் இன்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சியிலேயே ரசிகர்களின் மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளது. கொரோனா தொற்று காலத்திலும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி அடிக்கடி மாற்றப்பட்டு வந்த நிலையிலும், OTT யில் வெளியிடப்படும் என்ற பல யூகங்களுக்கு நடுவே இன்று, அக்டோபர் 9ஆம் தேதி காலை 5 மணி ஷோ வெளியானது.

நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ள இந்த படம் திரையரங்குகளில் இருந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

முதல் நாள் முதல் நிகழ்ச்சிகள் ஏற்கனவே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது மற்றும் ட்விட்டரில் #DoctorFDFS என்னும் ஹாஷ்டாக் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். ரசிகர்களை கதையோடு ஒன்றை வைக்கும் அளவுக்கான திரைக்கதை இந்த வெற்றிக்கு ஒரு மிகப்பெரிய ஒரு காரணம்.

சிவகார்த்திகேயன் மற்றும் யோகி பாபு நகைச்சுவை காட்சிகளும் மனதை வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக, நெல்சன் குமார் இயக்கத்தில், பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக நிபுணர்களிடமிருந்து டாக்டர் திரைப்படம் பெரும் விமர்சனங்கள் உருவாகியுள்ளது.

கேங் லீடர் (தெலுங்கு) புகழ் பிரியங்கா அருள் மோகன் நடித்த இந்தப் படத்தில் வினய், யோகி பாபு, இளவரசு, ஷாஜி சென், தீபா சங்கர், ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா சந்தோக் மற்றும் ரகு ராம் உள்ளிட்ட குழுவினர் உள்ளனர்.

ராஜேஷின் கேஜேஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை நெட்ஃபிக்ஸ் மற்றும் சன் டிவி வாங்கியுள்ளது.
படத்தின் தொழில்நுட்ப குழுவில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், எடிட்டர் ஆர் நிர்மல் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஆகியோர் அடங்குவர். டாக்டரின் 3 பாடல்களான ‘செல்லம்மா’, ‘நெஞ்சாமே’ மற்றும் ‘சோ பேபி’ ஆகியவை இன்னும் இசை ஸ்ட்ரீமிங் தளங்களை ஆட்சி செய்கின்றன.

ரசிகனின் பார்வையில் டாக்டர்:https://twitter.com/Chrissuccess/status/1446671874742800387

 

Previous article10,12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.!! ரூ.18,000 சம்பளம்..இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு.!!
Next article1.5 பில்லியன் ஃபேஸ்புக் தரவுகள் ஹேக்கர்கள் கையில்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!