விண்ணை முட்டும் அளவிற்கு உயரும் தங்கம் விலை! இனி ஒரு கிராம் கூட வாங்க முடியாத சூழல்?
கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் தங்கத்தின் மீது தான் முதலீடு செய்து வந்தனர்.அதனால் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்தது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
மேலும் கடந்த தீபாவளி பண்டிகை முதல் தற்போது முடிந்த பொங்கல் பண்டிகை வரை தங்கம் ஏறுமுகத்தையே சந்தித்து வருகின்றது.இந்நிலையில் நேற்று ஒரு பவுனுக்கு ரூ176 அதிகரித்து ரூ 42,880 க்கு விற்பனையானது. அதுபோலவே கிராமுக்கு ரூ22 அதிகரித்து ரூ5,338 க்கு விற்பனையானது.அதனையடுத்து வெள்ளி விலையும் நேற்று அதிகரித்தது.அந்தவகையில் கிராமுக்கு 30 காசுக்கள் அதிகரித்து ரூ74.80 க்கு விற்பனையானது.
மேலும் கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ74.80 க்கு விற்கப்படுகிறது.1கிலோ பார் வெள்ளி ரூ 74,800 க்கு விற்பனையானது.இன்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ 480 உயர்ந்து 43 ஆயிரத்து 800 க்கு விறபனையாகின்றது.மேலும் கிராமுக்கு ரூ 60 உயர்ந்து ரூ 5745 க்கு விற்பனையாகின்றது.மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் விலை ஏற்றம் என வியாபாரிகள் கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி வெள்ளி கிலோவுக்கு ரூ1300 உயர்ந்து 77,300 க்கு விற்பனையாகின்றது.