முத்துராமலிங்க தேவர் தொடர்பான அவதூறு தகவல்! ஆர் எஸ் எஸ் கடும் கண்டனம்!

0
203

ஆரம்பம் முதலே திமுக இந்துத்துவா கொள்கையை அடிப்படையாக கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. சாதாரணமாக அந்த அமைப்பு தமிழகத்திற்கு நுழைந்தால் கலவரம் ஏற்படும் என்ற காரணத்திற்காக திமுக அந்த அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறதா என்று ஆராய்ந்தோம்.

ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரியாக இருக்கிறது சிறுபான்மையினரை வைத்தும் அரசியல் செய்துவரும் திமுகவிற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பு கொள்கை ரீதியாக மிகப்பெரிய கட்டமைப்பாக திகழ்வதால் அந்த அமைப்பின் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்துத்துவா கொள்கையில் ஊறிப்போன ஆர் எஸ் எஸ் அமைப்பு தமிழகத்திற்குள் துளிர்விடத் தொடங்கினால் திமுக கடவுள் மறுப்பு கொள்கையை வைத்தும் அரசியல் செய்ய முடியாது, சிறுபான்மையினரை வைத்தும் அரசியல் செய்ய முடியாது.

இப்படி திமுகவின் ஒட்டுமொத்த சித்தாந்தங்களுக்கும் வேட்டு வைக்கும் விதமாக வளர்ந்து நிற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கண்டாலே இதன் காரணமாகத்தான் திமுகவிற்கு அறவே பிடிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.

திமுக ஆர் எஸ் எஸ் அமைப்பை எதிர்ப்பது ஒருபுறம் இருந்தாலும் கூட அந்த அமைப்பை கண்டு திமுக நடுநடுங்கி போய் இருக்கிறது என்பது அன்னைக்கால நிகழ்வுகளால் உறுதியாகிறது.

திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான முரசொலி நாளிதழ் வாட்ஸ் அப்பில் வந்தது இன்று தெரிவித்து நம் உயிர் இருக்கும் வரை தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் நுழையக்கூடாது என பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தெரிவித்ததாக ஒரு மீம்ஸ் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை அறிந்ததும் அந்த தகவல் முற்றிலும் ஆதாரமற்ற பொய்யான தகவல் என்பது மட்டுமல்லாமல் முத்துராமலிங்க தேவர் உயிருடன் இருந்த வரையில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் நட்பு பாராட்டினார் என்றும் சொல்லப்படுகிறது.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் முத்துராமலிங்க தேவர் எப்போதும் மத ரீதியாகவோ அல்லது சாதி ரீதியாகவோ யாரையும் இழிவுபடுத்தவில்லை. எந்த ஒரு நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் விதமாக எந்த சமயத்திலும் அவர் பேசவில்லை. அதிலும் மிக முக்கியமாக கடவுள் இல்லை என்ற வார்த்தை அவர் வாயிலிருந்து வந்ததாக இதுவரையில் எந்த ஒரு சான்றும் யாருக்கும் கிடைக்கவில்லை.

அவருடைய கொள்கையே தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்பதுதான்.

ஆர் எஸ் எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் கோல்வாக்கர் 51 ஆவது பிறந்தநாள் விழா 1956 ஆம் ஆண்டு நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. மதுரையில் நடைபெற்ற விழாவிற்கு முத்துராமலிங்க தேவர் தலைமை தாங்கினார். அந்த விழாவில் அவர் பேசும்போது நம்முடைய கருத்துக்கள் ஆர் எஸ் எஸ் கருத்துகளுடன் ஒன்றிணைந்தே இருந்து வந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது தேச பக்தர்களாலும் தெய்வீக பக்தர்களாலும் மறைக்கப்படும் முத்துராமலிங்க தேவர் ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்த்தார் என்று தெரிவித்து மக்களிடையே ஆர்எஸ்எஸ் தொடர்பான தவறான எதிர்மறையான எண்ணத்தை உண்டாக்க திமுகவும் அதன் நாளிதழும் முயற்சி செய்வது வெட்கக்கேடானது என்று தற்போது விமர்சனம் எழுந்துள்ளது.

தன்னுடைய கொள்கைக்கு ஒரு அமைப்பு ஒத்துப் போகவில்லை என்றால் அந்த அமைப்பை சீர்குலைக்க இவ்வளவு கீழ்த்தரமாக யோசிக்க முடியுமா என்பதை நாம் திமுகவிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சிலர் தெரிவித்து வருகிறார்கள்.

அதோடு எப்படி கீழ்த்தரமான அரசியலை திமுகவால் மட்டுமே செய்ய முடியும் என்றும் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஒரு மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் கட்சியின் அதிகாரப்பூர்வமான நாளிதழ் ஆதாரம் அற்ற தகவல்களை தெரிவிப்பதும் ஆர்எஸ்எஸ் தொடர்பான அவதூறு தகவல்களை பரப்புவதும், வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleமின் கட்டண உயர்வு விவகாரம்! உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு!
Next articleகொடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்ய துடிக்கும் தமிழக அரசு! காத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி!