கொடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்ய துடிக்கும் தமிழக அரசு! காத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

0
99

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான வடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் சூடு பிடித்துள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய நண்பர் இளங்கோவனை கைது செய்ய தமிழக அரசு களமிறங்கியுள்ளது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்க்குள் புகுந்தது.

அங்கே காவலாளியாக இருந்த உன் பகதூர் அவர்களை தடுக்க முயற்சிக்க கொள்ளை கொம்பன் அவரை கட்டிப்போட்டு அடித்ததில் அவர் உயிரிழந்தார். அதன் பிறகு அந்த கும்பல் கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி சென்றது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் உள்ளிட்ட கேரளாவை சார்ந்த 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்கள்.

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட சேலம் ஆத்தூரை சார்ந்த கனகராஜ் என்பவர் மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார். அவர் ஏற்கனவே ஜெயலலிதாவிடம் ஓட்டுநராக பணியாற்றியவர் இதே போல சயான் கேரளாவுக்கு மனைவி மற்றும் மகளுடன் திரும்பியபோது அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது. அதில் அவருடைய மனைவி மற்றும் மகள் உள்ளிட்டோர் பலியாய்னர். இந்த விபத்தும் மர்மமான முறையில் நடைபெற்றதால் இதன் பின்னணியில் சதி இருக்கலாம் என்று சந்தேகம் உண்டானது.

அப்போதைய எதிர்க்கட்சியான திமுக தங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வழக்கை தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி சிறைக்கு அனுப்புவோம் என்று உறுதி அளித்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலம் கடந்த பிறகும் கூட இது தொடர்பான விசாரணையை தீவிர படுத்தவில்லை என்று அரசுக்கு பல திசைகளில் இருந்தும் நெருக்கடி வர ஆரம்பமானது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் விசாரணை முடுக்கி விடப்பட்டது ஜெயலலிதாவின் தோழி சசிகலா கனகராஜ் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட 316 பேரிடம் தொடர்பு விசாரணை செய்யப்பட்டது. இந்த நிலையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை அவசர அவசரமாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுகவின் வட்டாரங்கள் தெரிவித்ததாவது, வடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் எப்படியாவது பழனிச்சாமியையும் அவருடைய நண்பரும் சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளருமான இளங்கோவனையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் திட்டம் இந்த விவகாரத்தில் விசாரணை மூலமாக இருவரும் நேரடியாக சிக்குவார்கள் என்று தான் அரசு நினைத்தது.

ஆனால் விசாரணையில் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை இருக்கும் ஆதாரங்களை வைத்து இருவரையும் கைது செய்யுங்கள் என்று மேலிடத்திலிருந்து நெருக்கடி வழங்கப்பட்டது. ஆனால் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் முதல் நீலகிரி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வரையில் ஆதாரம் இன்றி பழனிச்சாமியை கைது செய்ய முடியாது என்றும் மறுத்து விட்டனர்.

ஆகவே கோபமடைந்து அரசு தரப்பில் இருந்து வழக்கை சிபிசிஐடி மாற்றியுள்ளது. இதன் ஒரு கட்டமாக தான் வடக்கு மண்டல ஐஜியாக இருந்த தேன்மொழியை சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமனம் செய்துள்ளனர். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பழனிச்சாமியை கைது செய்ய வேண்டும் என்று தேன்மொழிக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் வேகமாக விசாரணை தொடங்கி உள்ளனர். தீபாவளிக்குப் பிறகு எந்நேரமும் பழனிசாமியும் இளங்கோபனும் கைது செய்யப்படலாம் அதிமுகவில் இருப்பதை போல காட்டிக் கொண்டிருக்கும் தலைவர் ஒருவர் தான் இந்த விவகாரத்தில் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்திருக்கிறார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றால் அரசியல் ரீதியாக அது தனக்கு சாதகமாக இருக்கும் என்பதால் எடப்பாடி பழனிச்சாமியும் அதனை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.