சிலேட்டு குச்சி, விபூதி சாப்பிடுபவரா நீங்கள்? அப்படி என்றால் இதனை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்..!!

Photo of author

By Priya

Slate kuchi eating in tamil: சிலேட்டு குச்சியை (பல்பம்) (slate bulbum) சாப்பிடும் நபர்களை நாம் பார்த்திருப்போம். ஏன் நம் உடன் இருக்கும் தோழனோ, தோழிகளோ, தங்கை, அண்ணன், தம்பி இவற்றில் யாராவது ஒருவார் இந்த பல்பம் சாப்பிடுவர்களாக இருந்திருப்பார்கள். ஏன் நமக்கும் அந்த பழக்கம் சின்ன வயதில் இருந்திருக்கலாம். காலப்போக்கில் அது மாறி இருக்கும்.

ஆனால் தற்போது இந்த குச்சியை கடைகளில் அல்லது வேறு எங்கேயாவது பார்த்தால் உடனே அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற தோன்றும். ஆனால் அதனை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரிவதில்லை. காரணம் நான் சிறுவயதில் நிறை முறை சாப்பிட்டு உள்ளேன். எனக்கு தற்போது வரை ஒன்றும் ஆகவில்லை என எண்ணி வாங்கி சாப்பிடுவார்கள்.

மேலும் ஒரு சிலர் கோயிலுக்கு சென்றால் திருநீறு கொடுப்பதை வாங்கி நெற்றியில் பூசி விட்டு, தலையில் சிறிதளவு போட்டு விட்டு, வாயில் போட்டு சாப்பிடுவார்கள். அதனால் என்ன பாதிப்பு உள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பல்பம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்

விபூதியை ஒரு சிலர் இயற்கையாக நாட்டு மாட்டு சாணத்தில் இருந்து தான் பெறப்படுகிறது. மேலும் இதனை தயாரிக்கும் முறையும் இயற்கையாக தான் உள்ளது. இதை சாப்பிடுவதால் என்ன தீமை இருக்க போகிறது என கேட்டால், இயற்கையாக தயாரிக்கப்படும் விபூதியில் எந்த நறுமண பொருட்களையும் சேர்க்க மாட்டார்கள்.

ஆனால் ஒரு சில திருநீறில் வாசனைகள் அதிகமாக இருக்கும். மேலும் சில விபூதிகளில் கால்சியம் மெக்னீசியம் ஆன கனிமம் அதிக அளவில் சேர்க்கப்படலாம். அது வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் நாம் சாப்பிடும் திருநீறு இயற்கையானதா என தெரியாமல் உட்கொள்வது சிறந்தல்ல.

அடுத்ததாக சிலேட் பல்பம் (side effects of eating-slate bulbum in tamil) தயாரிப்பில் சுண்ணாம்பு காெண்டு கலந்து தயாரிக்கப்படுவதால் உடலுக்கு இது நல்லதல்ல. மேலும் இந்த பழக்கம் சிறிய குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் என்ன வென்று பார்த்தால் அவர்களுக்கு இரும்பு சத்து குறைபாட்டினால் இவ்வாறு தோன்றும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு முக்கிய காரணமாக இந்த பல்பம் சாப்பிடும் பழக்கம் உள்ளது. மேலும் செரிமான பிரச்சனையை உண்டாக்கும்.

மேலும் இரத்த சோகை உருவாகும். இந்த பல்பத்தை உட்கொள்வதால் உடலின் உள்ளுறுப்புகள் அதிகம் பாதிக்கப்படும். அதில் முதலில் பாதிக்கப்படுவது இந்த சிறுநீரகங்கள் தான். வயிற்றுப்போக்கு, மாதவிடாய் தள்ளிபோதல், வயிற்றில் கட்டி, போன்றவை உருவாகும்.

இந்த பழக்கம் ஒருசிலருக்கு மறைந்திருக்கலாம். ஆனால் தற்போது வரை இந்த பழக்கம் இருந்தால் நீங்கள் உணவில் இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: மூச்சு பிடிப்பு முதுகு வலி உள்ளதா? இதை செய்யுங்க.. உடனே சரியாகிவிடும்..!!