கொரோனா பாதிப்பால் சிறிதான ஆணுறுப்பு! இளைஞர் வெளியிட்ட பகீர் தகவல்!
கொரோனா தொற்றானது இரண்டு வருடங்களாக மக்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இன்றுவரை மக்கள் இத்தொற்றிலிலிருந்து மீள முடியாமல் பெருமளவு பாதித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடம் பிறக்கும் பொழுதும் இந்த தொற்றும் புதிதாக ஒரு மாற்றம் அடைந்து மக்களிடையே ஊடுருவி வருகிறது. அதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் நாளடைவில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு உடம்பிற்கு ஏற்ப பல மாறுதல்கள் ஏற்படுகிறது.
கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் பலர் , முடி உதிர்வு எனக்கூறி பல பிரச்சனைகள் ஏற்படுகிறது என கூறி வருகின்றனர். அந்த வரிசையில் அமெரிக்காவை சேர்ந்த 30 வயது இளைஞர் பகீர் தகவலை தற்போது தெரிவித்துள்ளார். தனக்கு கொரனோ தொற்று உறுதியாகி அதற்குப் பின்பு தன் உடலில் ஏற்பட்ட மாறுதல்களை சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்தார். இவருக்கு லாங் கோவிட் எனப்படும் நீண்ட கால கொரோனா பாதிப்பு இருந்துள்ளது.
அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். லாங் கோவிட் எனப்படும் நீண்ட கால கொரோனா பாதிப்பு முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு திரும்பிய சில நாட்களில் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால் அவரது ஆண்குறி அளவு குறைந்து காணப்பட்டது. அதனைக் கண்டு மிகவும் குழப்பம் அடைந்துள்ளார்.கொரோனா தொற்றுக்கு முன்பு இயல்பாக இருக்கும் ஆண் குறி அளவை விடவும் சற்று பெரியதாகவே காணப்பட்டது.
ஆனால் தற்பொழுது சிகிச்சையின் காரணத்தினால் எனது ஆண்குறி அளவு ஒன்றரை இன்ச் சிறியதாகி விட்டது. அதே போல விரைப்புத்தன்மையும் குறைந்து விட்டது. இதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசித்த போது இனி வரும் காலங்களில் எனது உடம்பில் ஏற்பட்ட இந்த மாறுதல் நிரந்தரமானதாக இருக்கும் என தெரிவித்தார். அதனால் எனக்கு உடலுறவில் நாட்டம் குறைந்து விட்டது. இவ்வாறு சமூக வலைத்தளத்தில் அவர் பேசியுள்ளார். இதனை கண்டு பல இளைஞர்கள் அச்சத்தில் உள்ளனர்.