நாட்டில் சற்றே அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!

Photo of author

By Sakthi

நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிலும் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதலில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு எல்லோருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன ஆனால் தற்சமயம் வியாழன் மற்றும் ஞாயிறு என்று வாரத்தில் இரண்டு நாட்கள் தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து இருக்கிறது. சரியாக சொல்லவேண்டும் என்று சொன்னாள் சென்னையில் ஒட்டு மொத்த மக்கள்தொகையில் 54 சதவீதம் பேர் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் தலைநகர் சென்னையில் 18 வயதிற்கு மேற்பட்டோர் சுமார் 82 சதவீதம் பேர் இருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அதில் தற்போது 2 தவணை தடுப்பூசிகளையும், சுமார் 54 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே ஏறத்தாழ இன்னும் சென்னையில் சுமார் 30% நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், நாட்டில் நோய் தொற்று பாதிப்பு குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 1283 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது இது இன்னும் நேற்றைய பாதிப்பான 7 1579 ஐ விட சற்று குறைவாகும் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, நாட்டில் நூற்றில் காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 35 ஆயிரத்து 763 ஆக அதிகரித்திருக்கிறது.

சென்ற 24 மணி நேரத்தில் நோய்தொற்று பாதிப்பில் இருந்து 10 ஆயிரத்து 949பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றிலிருந்து மரணமடைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 45 ஆயிரத்து 496 ஆக அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 481பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இருந்தாலும் வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 437 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்து 584 ஆக அதிகரித்திருக்கிறது.