சற்று குறைவாக காணப்பட்ட கொரோனா! குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகம்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,923 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,293 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதுவரை தமிழகத்தில் 4,27,15,193 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
நாடு முழுவதும் ஒரு நாளில் 17 பேர் கொரோனாவிற்கு பலியானவர். இதுவரை ஒட்டுமொத்தமாக 5,24,890 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 79,313 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.61 ஆகவும் உயிரிழப்பு சதவீதம் 1.21 ஆகவும் உள்ளது. கொரோனா பரவல் வாராந்திர சதவீதம் 4.32 ஆகவும், மாதாந்திர சதவீதம் 2.62 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதுவரை 196.32 கோடி தடுப்பூசி டோஸ்கள் இந்தியா முழுவதும் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அரசு தெரிவித்துள்ளது.