மத்திய அரசின் சலுகைகளை கிடைக்க நாடு முழுவதும் இருக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லி: சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உலக அளவில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்நிலையில், டெல்லியில் இணையவழி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துத் தரப்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து, சிறிய வணிகர்களுக்கும் அரசு மூலமாக சலுகைகள் வழங்குவது குறித்து பரிசீலிக்கபட்டு வருகிறது எனவும் அவர் கூறினார்.
இதேபோன்ற சலுகைகளை பெறுவதற்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மத்திய அரசிடம் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். பதிவு செய்யப்படாத எந்த ஒரு தொழில் நிறுவனங்களுக்கும் மத்திய அரசின் சலுகைகள் எதுவும் கிடைக்காது என்று குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் அனைத்து சிறு வணிகர்களையும் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவர முயற்சிப்பதாக தெரிவித்தார். இதற்காக என்.ஜி.ஒ.க்கலின் உதவி தேவைப்படுவதாகவும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களை பதவு செய்துக்கொள்ள தன்னார்வ நிறுவனங்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டார்.