கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சின்ன வெங்காயம்… கவலையில் செங்கோட்டை விவசாயிகள்!!

0
136
கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சின்ன வெங்காயம்… கவலையில் செங்கோட்டை விவசாயிகள்…
சமையலின் அத்தியாவசிய தவிர்க்க முடியாத பொருளாக இருக்கும் சின்ன வெங்காயம் கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் செங்கோட்டை பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக இருக்கும் தக்காளி போல வெங்காயமும் தவிர்க்க முடியாத பொருளாக உள்ளது. வெங்காயம் இல்லாமல் சமையலே செய்ய முடியாது என்ற நிலமை உள்ளது. ஒரு புறம் தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டு இருக்க தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக சின்ன வெங்காயம் கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் தென்காசி மாவடத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
தென்காசி மாவட்டம் விவசாயிகள் அனைவரும் சின்ன வெங்காயத்தை அதிக அளவு பயிரிட்டனர். இதையடுத்து தென்காசி விவசாயிகள் அதிக அளவில் உள்ள சின்ன வெங்காயத்தை சந்தையில் விரைவாக விற்பனை செய்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை குறைந்து கிலௌ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர். மற்றொரு பக்கம் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள இலத்தூர், சீவநல்லூர், அச்சன் புதூர், சிவராமபேட்டை, கரிசல் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் 1000 ஏக்கர் அளவில் பயரிடப்பட வேண்டிய சின்ற வெங்காயத்தின் சாகுபடியானது தென்மேற்கு பருவமழை குறைந்ததால் அந்த பகுதிகளில் நிலத்தடி நீரை மட்டுமே வைத்து 500 ஏக்கர் அளவில் சின்ன வெங்காயம் பயிரடப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் “தென்காசி மாவட்டத்தில் எங்கள் பகுதியில் நெல்லுக்கு அடுத்ததாக சின்ன வெங்காயம் அதிகளவு பயிரிடப்படுகின்றது. 2 மாதம் பயிரான சின்ன வெங்காயத்திற்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படாது. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். சின்ன வெங்காயம் விளைச்சலுக்கு ஏதுவான நிலமாக இங்கு இருப்பதால் அதிகளவு விவசாயம் செய்கின்றோம்.
ஒரு ஏக்கர் நிலத்துக்கு  உழுவது, பயிரிடுவது, பூச்சிக்கு மருந்து அடிப்பது, மழை இல்லையென்றால் தண்ணீர் வாங்கி பாய்ச்சுவது போன்று பயிரிடுவது முதல் அறுவடை காலம் வரை குறைந்தது 50000 ரூபாய் முதல் 75000 வரை செலவாகின்றது.
இந்த அறுவடைக்கு ஆன செலவிற்கு தகுந்தது போல சென்ற மாதம் சின்ன வெங்காயம் கிலோ 140 ரூபாய்க்கு இலாபகரமாக விற்பனை ஆனதால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் தற்போது கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. எங்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். மழை காலங்களில் வெங்காயத்தை உரிய வகையில் பாதுகாக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறினர்.
Previous articleவெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்..! 7 செயற்கை கோள்களுடன் பயணம்..!
Next articleஒரே ஓவரில் 48 ரன்கள் விளாசிய ஆப்கன் வீரர்… டி20 வரலாற்றில் புதிய சாதனை!!