போலியான முகவரியை  பயன்படுத்தி மோசடி!.கொந்தளித்த கவிஞர் சினேகன்!..

Photo of author

By Parthipan K

போலியான முகவரியை  பயன்படுத்தி மோசடி!.கொந்தளித்த கவிஞர் சினேகன்?!..

தமிழ் பாடலாசிரியராகவும்,சிறந்த நடிகராகவும் மற்றும் கவிதை எழுத்தாளர் ஆவார்.இவர் யோகி என்ற திரைப்படம் வாயிலாக  நடிகராகவும் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து சென்னையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும் மற்றும் திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் கவிஞர் சினேகன்.

இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர்  கூறப்பட்டியிருப்பதாவது, நான் சினேகம் என்ற பெயரில் கடந்த 2015-ம் ஆண்டு அறக்கட்டளையை பதிவு செய்து நடத்தி வருகிறேன். இதன் மூலம் தமிழகம் முழுவதும் பல சேவை திட்டங்களை செய்து வருகிறேன்.

இந்த நிலையில் எனது அறக்கட்டளை பெயரை சின்னத்திரை பிரபலமான ஜெயலட்சுமி பயன்படுத்தி நிதி வசூலிப்பதாக வருமான வரித்துறை மூலம் எனக்கு தகவல் வந்தது. அப்போது நான் எனது மேனேஜரை அனுப்பி விசாரித்த போது, அவர் போலியான முகவரி, இணையதளத்தை கொடுத்து என்னுடைய அறக்கட்டளையை இயக்குவது தெரியவந்தது.

எனவே மோசடியில் ஈடுபட்ட ஜெயலட்சுமி மீது  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது அறக்கட்டளையில் இயங்கும் போலி இணையதளத்தை முடக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர்கூறியிருந்தார். சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பா.ஜ.க. பிரமுகர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.இச்செய்தி இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.