நடிகர் சிம்புவுக்கு தொடரும் பாம்பு பிரச்சனை! ஆதாரம் கேட்டு சிம்புவை வறுத்தெடுக்கும் வனத்துறை!

சமீபத்தில் ஈஸ்வரன் படத்துக்காக நடிகர் சிம்பு பாம்பை பிடிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதையடுத்து வனத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்போது அது பிளாஸ்டிக் பாம்பு என்று சுசீந்திரன் மற்றும் சிம்பு வனத்துறையினரிடம் கூறினார்.

ஆனால் அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது வனத்துறை.

இருந்த போதிலும் அதற்கான ஆவணங்களை தரவில்லை என கூறப்படுகிறது.

எனவே படக்குழுவினர் மற்றும் சிம்புவுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஆவணங்களைச் சரியாக தராவிட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Comment