இதுவரை வலிமை படம் செய்த வசூல் இத்தனை கோடியாம்! போனி கபூர் வெளியிட்ட வசூல் நிலவரம்!!

Photo of author

By Parthipan K

இதுவரை வலிமை படம் செய்த வசூல் இத்தனை கோடியாம்! போனி கபூர் வெளியிட்ட வசூல் நிலவரம்!!

Parthipan K

இதுவரை வலிமை படம் செய்த வசூல் இத்தனை கோடியாம்! போனி கபூர் வெளியிட்ட வசூல் நிலவரம்!!

ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியல் அஜித் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம்தான் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து, எச்.வினோத் இயக்கி இருந்த இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடித்திருந்தார். வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்திருந்தார். அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து இரண்டு ஆண்டு இடைவெளிக்குபின் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் ‘வலிமை’ படம் வெளியானது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகளுக்கு பின் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து, வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களின் சிறப்பான வரவேற்புக்கு மத்தியில் வசூல் ரீதியில் வெற்றி படமாக அமைந்தது.

படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.36 கோடி வசூல் செய்தது. சென்னையில் இருந்து மட்டும் ரூபாய் 1.82 கோடி வசூல் செய்திருந்தது. உலகளவில் முதல் மூன்று நாட்களில் ரூ.100 கோடியை கடந்து சாதனை படைத்தது வலிமை திரைப்படம்.

இந்த நிலையில் வலிமை  படம் இதுவரை பெற்ற வசூலை அதன் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். அதன்படி வலிமை திரைப்படம் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.136 கோடி வசூலித்திருக்கிறது என கூறப்படுகிறது.