சினிமாத்துறை:
சினிமா துறையை பொருத்தவரை பின்பலம் எதுவுமே இல்லை என்றாலும் கூட திறமை மட்டும் இருந்தால் போதும் ஜொலித்து விடலாம் மக்களின் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்து நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டு வாழலாம் என்ற பிம்பத்தை கொண்டுள்ளது திரைத்துறை.
அப்படித்தான் தமிழ் சினிமாவில் இந்த சினிமா துறையில் எத்தனையோ பின்பலம் இல்லாத பிரபலங்கள் தன்னுடைய திறமையை மட்டும் நம்பி திரைத்துறைக்கு வந்து இன்று நட்சத்திர நடிகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் .
![kamal hassan 1](https://news4tamil.com/wp-content/uploads/2025/02/kamal-hassan-1.jpg)
கமல் ஹாசன்:
ஆனால் கமல்ஹாசன் அதில் கொஞ்சம் மாறுபட்டவர். ஆம் அவருக்கு திரைபின்பலம் இருந்தபோதிலும் தன்னுடைய திறமையால் தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே சினிமாவில் உருவாக்கி வைத்து இருக்கிறார்..
உலக நாயகன் என்று சொல்லும் அளவிற்கு படத்திற்கு படம் பிரம்மி பூட்டக்கூடிய நடிப்பை வெளிப்படுத்துபவர் நடிகர் கமல்ஹாசன் .
70 வயது ஆகிவிட்ட போது கூட அவர் ஆக்சன் திரைப்படங்களில் அதிரடியாக நடித்து வருகிறார். தற்போது நடிகர் கமல்ஹாசன் தக் லைஃப் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இப்படியான சமயத்தில் நடிகர் கமல்ஹாசன் கேரவன் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் இணையத்தில் வெளியாகிய அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கி கொண்டு இருக்கிறது.
கேரவனில் உள்ள சிறப்பம்சங்கள்:
ஆம் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய கேரவனை நாட்டில் முக்கிய பதவிகளை வகிக்கும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு வாடகை விட்டு வருமானம் பார்த்து வருகிறாராம். அது குறித்து தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். அதாவது அப்படி என்ன கமல்ஹாசன் கேரவனில் சிறப்பு அம்சங்கள் இருக்கிறது என எடுத்து பார்த்தோமேயானால்…
இந்த கேரவன் 8 ஸ்டார் ஹோட்டல் போல காட்சி அளிக்கக்கூடிய வகையில் நான்கு பக்கமும் ஏசி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஏசிகளில் ஏதேனும் பழுது அடைந்துவிட்டால் அதை மாற்றுவதற்காக ஸ்பேர் ஏசி உள்ளிட்டவை இருக்கிறதாம்.
இந்த கேரவனில் 1000 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டிருப்பதாகவும், இரண்டு மேக்கப் ரூம்கள் மிகவும் பிரம்மாண்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. சகல வசதிகளும் படைத்த இந்த கேரவனில் திடீரென யாரேனும் வந்துவிட்டால் அவர்கள் அமர்ந்து பேசுவதற்காக மீட்டிங் ஹாலும் பிரம்மாண்டமாக ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது.