ஒரே நாளில் இத்தனை இரயில்கள் ரத்தா..பயணிகள் கடும் அவதி!..காரணம் என்னவாக இருக்கும்?..

0
234
So many trains canceled in a single day..Passengers suffer a lot!..What could be the reason?..
So many trains canceled in a single day..Passengers suffer a lot!..What could be the reason?..

ஒரே நாளில் இத்தனை இரயில்கள் ரத்தா..பயணிகள் கடும் அவதி!..காரணம் என்னவாக இருக்கும்?..

கடந்த சில மாதமாக நாடு முழுவதும் பெய்த மழை மற்றும் சில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.மேலும் அவ்வழியாக பாறைகள் தண்டவாளங்கள் மேலே விழுந்துள்ளது.அதனை விரையில் சீர் செய்யவும்.

மேலும் அதைப்போல சிக்னல் கோளாறுகளும் அங்கு ஏற்பட்டு இருந்தன. இவற்றை ரயில்வே நிர்வாகம் நேற்று சரி செய்தது.எனவே இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக தான் நாடு முழுவதும் நேற்று 103 ரயில்கள் முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டது.மேலும் 35 ரயில்கள் பகுதிநேர அளவில் ரத்துசெய்யப்பட்டன.

தர்பங்கா எக்ஸ்பிரஸ், டார்ஜிலிங் எக்ஸ்பிரஸ், சோலாப்பூர் எக்ஸ்பிரஸ், ராய்ப்பூர் எக்ஸ்பிரஸ், நெல்லூர்-சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை-சென்னை போன்ற ரெயில்கள் முற்றிலுமாக ரத்துசெய்யப்பட்டன. சென்னை-விஜயவாடா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் பகுதியாக ரத்துசெய்யப்பட்டன.

இந்நிலையில் பல ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதனைபோல கணினி பயன்பாட்டிலும் சில பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்காரணமாக இ-டிக்கெட் புக்கிங் சேவையும் பாதிக்கப்பட்டது.மேலும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் சரியாக செயல்படவில்லை.

ரயில்வே நிர்வாகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளால் நேற்று நிச்சயித்த பயணத்தை மேற்கொள்ள முடியாமல் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் ரத்துசெய்ய முடியாமலும் சிரமப்பட்டனர்.இதன் காரணமாக அனைத்து ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது.

Previous articleஎதிர்க்கட்சியின் சதியா! ஓ பன்னீர்செல்வம் கண்டனம்!
Next articleகாலையிலேயே பரபரப்பு! பிரபல திரைப்பட பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி ரைய்டு!