பிக்பாஸ் பிரபலத்திற்கு அடித்த யோகம்!! 

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவை தாண்டி சீரியல்களையும் ரசிக்கும் ரசிகர் கூட்டங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிஎன்றாலே தனிப்பட்ட விருப்பம் இருக்கும்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது பிரபலங்களை 100 நாட்கள் ஒரே வீட்டில் எந்த ஒரு சமூக தொடர்பும் இல்லாமல் தனிமைப்படுத்தி அவர்களுக்கு இடையே நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்புவது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் தெலுங்கு ஹிந்தி என பிற மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. அப்படி தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து 3 சீசன்களை வழங்கி வந்துள்ளார்.

கடந்த மூன்றாவது சீசனில் இலங்கை நடிகையான லாஸ்லியா பெரிதும் பிரபலமானார். அவர் தற்போது முதல் படமான ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இந்தப் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தில் லாஸ்லியாவுக்கு 25 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்ட உள்ளதாகவும் அறிமுக நடிகைக்கு இவ்வளவு சம்பளம் இதுவரை எடுத்ததில்லை என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.