சற்றுமுன் : அப்படிப்போடு.. ஒட்டு மொத்தமாக குறைந்த கேஸ் விலை!!

Photo of author

By Rupa

சற்றுமுன் : அப்படிப்போடு.. ஒட்டு மொத்தமாக குறைந்த கேஸ் விலை!!

Rupa

Cylinder Price: மே 1ஆம் தேதியுடன், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலையில் ரூ.15.50 குறைந்துள்ளது. இப்போது சென்னை நகரில் இந்த வணிக சிலிண்டர் ரூ.1906க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாற்றம் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விலை மாற்றத்தின் பின்னணியில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருடன் இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பொருளாதார காரணிகள் உள்ளன. இது மாதந்தோறும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதால், எண்ணெய் நிறுவனங்கள் அதன் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

வணிக சிலிண்டர் விலை குறைந்தாலும், வீட்டில் உபயோகிக்கும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.868.50 என அதே நிலையில் தான் தொடர்கிறது. மேலும், 5 கிலோ சிலிண்டர் ரூ.323க்கும், 47.5 கிலோ வணிக சிலிண்டர் ரூ.4761-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

மும்பை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட பிற நகரங்களிலும் விலை மாற்றங்கள் காணப்பட்டு வருகின்றன. டெல்லியில் வணிக சிலிண்டர் விலை ரூ.1747.50, மும்பையில் ரூ.852.50, பெங்களூருவில் ரூ.855 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பீகாரின் பாட்னாவில் ரூ.1997.50 என அதிக விலையில் உள்ளது.

இந்த மாற்றம், உணவகங்கள், கடைகள் மற்றும் வணிக சார்ந்த சேவைகளில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.