நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா குறித்து பல விதமான விமர்சனங்களும் சர்ச்சை பேச்சுகளும் வந்த வண்ணம் இருந்தன.
இவற்றுக்கு முடிவு கட்டும் விதமாக நாக சைதன்யா நடிகை சோபிதாவை மணம் முடிக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டார். இது சமந்தாவின் உடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளித்தது.
எனினும் நடிகை சமந்தா இதற்காக பெரிதளவில் வருத்தப்படாமல் தன்னுடைய கெரியரில் ஃபோக்கஸ் செய்ய ஆரம்பித்தார். ஆனால் அதில் அவருக்கு ஆதரவாக யாரும் இல்லை என்றும் தன்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில் கூட தன்னுடைய பெற்றோரும் தன்னை கண்டு கொள்ளவில்லை என மிகவும் மனம் உருகி பேட்டி ஒன்றினை அளித்திருந்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்பொழுது நடிகை சமந்தா அவர்களின் தந்தை இறந்தது இவருக்கு இன்னும் மனவேதனையை அளித்துள்ளது என்றே கூறலாம். சமந்தாவின் உடைய வாழ்க்கை ஒரு பக்கம் இவ்வாறாக செல்ல மறுபக்கம் நாக சைதன்யா மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளும் இவரை துன்புறுத்துவதாகவே அமைந்துள்ளது.
சமீபத்தில் நடந்த ஒரு ஜூம் நேர்காணல் ஒன்றில் நடிகை சோபிதா குறித்து சில தகவல்களை நாக சைதன்யா பகிர்ந்திருக்கிறார். அது பின் வருமாறு :-
” சோபிதா ஒரு குடும்ப பெண். எங்கள் குடும்பங்கள் ஒன்றாக இருப்பதை பார்ப்பதற்கு அழகாக உள்ளது. மேலும் பாரம்பரியத்தை பொறுத்த அளவில், இருவரின் பாரம்பரியமும் ஒரே மாதிரி உள்ளது. அதனால் தான் திருமணம் செய்ய முடிவு எடுத்தோம் ” என்றவர் கூறியிருப்பது நடிகை சமந்தாவின் ரசிகர்களை மிகவும் கோபம் அடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.