12 வருடங்களாக பீர் தொட்டியில் சிறுநீர் கழித்த ஊழியர்.? புதிய சர்ச்சையில் மதுபான நிறுவனம்

Photo of author

By Jayachandiran

பட்வைசர் என்னும் பீர் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 34 வயதுடைய வால்டர் என்பவர் கடந்த 12 வருடங்களாக பீர் தொட்டியில் சிறுநீர் கழித்து வந்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பட்வைசர் நிறுவனம் பீர் தயாரிக்கும் பல கிளைகளில் FORT COLLINS பகுதியில் உள்ள தொழிற்சாலையில் மட்டுமே அவர் வேலைபார்த்து வந்ததாகவும் மற்ற கிளையில் தயாரிக்கும் பீர் டின்கள் தப்பித்துவிட்டதாக அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.

வால்டர் தனது நண்பர்களுடன் இருக்கும் நேரங்களில் அவரது நண்பர்கள் பட்வைசர் பீர் குடிக்கும்போது சிரிப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதன்பின்னர் இந்த செய்தி சமூகவலைதளங்களில் தீயாக பரவியது. இந்த விஷயம் மீம்ஸ்களாக உருவாகி பல்வேறு பக்கங்களில் கிண்டலாக பகிரப்பட்டன. இதைப்பார்த்த குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பீர் தொட்டியில் சிறுநீர் கழிப்பதை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த செய்தி போலியானது என்றும் நகைச்சுவைக்காக எழுதப்படும் இந்த இணைய பக்கத்தில் புனைகதைகளும் எழுதப்படுவதால் இந்த செய்தி உண்மையாக இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தாலும், இது பொய்யான தகவல் என்று அறிந்தபின் மதுபான பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.