மாரிதாஸுக்கு திமுகவினர் கொலை மிரட்டல்! செல்போன் எண்களை வெளியிட்டதால் உபிக்கள் கலக்கம்

Photo of author

By Parthipan K

மாரிதாஸுக்கு திமுகவினர் கொலை மிரட்டல்! செல்போன் எண்களை வெளியிட்டதால் உபிக்கள் கலக்கம்

திமுகவும் அதன் கூட்டணி கட்சி என்று‌ சொல்லிக்கொண்டு இருக்கும் கூடாரங்கள் செய்யும் இந்து எதிர்ப்பு கொள்கைகளையும் அவர்களின் பித்தலாட்டங்களையும் தனது இணையதள பக்கத்தில் வீடியோ மூலம் தோலுரித்து காட்டி வருகிறார் சமூக வலைத்தள போராளி மாரிதாஸ்‌.

நான்கு நாட்களுக்கு முன்பு திருமாவளவனை பற்றி பதிவிட்டு வீடியோ காணொளியை சன் டிவி நிறுவனம் முடக்கியது, இதனையடுத்து நேற்று திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா வின் முகத்திரையை அம்பலப்படுத்தும் வீடியோவை வெளியிட்டார். இதனால் கடும் கோபமடைந்த திமுகவினர் மாரிதாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்,

மாரிதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து திமுக ஏவி விட்ட வெறி நாய் கூட்டம் என்னைத் தொந்தரவு செய்கிறது போன் செய்து. கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணி இல்லாத திமுக தலைமை மிரட்டி உருட்டி அமைதியாக்கத் துடிக்கிறது.

என்னை 7நாளும் 24மணி நேரமும் தொந்தரவு செய்ய ஒரு கூட்டத்தை ஏவி விட்டுள்ளது இந்த வெக்கம் கெட்ட கூட்டம்.

“செஞ்சுருவோம், உன்ன அத பண்ணிருவோம்” என்று மிரட்டும் கூட்டத்திற்கு அறிவே கிடையாது. கொஞ்சம் யோசிங்க சார்.

இந்துக்களை அவமானம் செய்து கொண்டிருப்பீர் அதற்குப் பதிலடி கொடுக்காமல் வேடிக்கை பார்க்க நான் ஒன்றுன் உணர்வற்ற பிணம் அல்ல.

நீங்கள் அனைத்து மதத்தினரைப் போல் இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கையை மதிப்பளித்து விலகி நில்லுங்கள் என்கிறேன் அவ்வளவு.

ஆக எதையும் நிறுத்த முடியாது. மொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராக பேசும் சீக்கிரம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது.

உதயநிதி ஆதரவாளர்கள் தூக்கி போடும் பணத்திற்கு நாக்கை தொங்க போடும் இந்துகள் இருக்கலாம் உணர்வில்லாமல். ஆனால் என் போன்ற பல லட்சம் மக்கள் இருக்கிறார்கள் எதிர்வினை காட்ட.

என்று தெரிவித்துள்ளார். கூடவே மிரட்டல் விடுத்த நபர்களின் தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளார்.