Sodakku Thakkali: ஏழைகளின் குலாப் ஜாமுன்..!! உடம்பில் இருக்கும் அனைத்து நோய்களும் க்ளோஸ்..!!

Photo of author

By Priya

Sodakku Thakkali: நாம் வாழ்கின்ற இந்த சுற்றுச்சூழலில் நம்மை சுற்றி பல அரிய மூலிகைகள் உள்ளன. அனால் நமக்கு தான் அவைகள் குப்பை செடிகளாகவும், களைச் செடிகளாகவும் தெரிகின்றன. ஒரு சில செடிகளின் மருத்துவம் மகிமை என்னவென்று தெரியாமல் நம் உடம்பில் இருக்கும் நோய்களுக்கு மருந்துகள் தேடி சென்றுக்கொண்டிருக்கிறோம். மேலும் நம் முன்னோர்கள் எந்த ஒரு ஆங்கில மருத்துவமும் கண்டுப்பிடிக்காத பாேது அவர்களை சுற்றியுள்ள செடிகளின் மகத்துவத்தை அறிந்துக்கொண்டு முறையாக பயன்படுத்தி வந்தனர்.

எந்தக்காலமாக இருந்தாலும் நோய் ஒன்று தான். அதற்கு கொடுக்கப்படும் மருந்தும் ஒன்று தான். அந்த வகையில் நம் வீட்டை சுற்றி நம் அருகில் வளர்ந்திருக்கும் செடி தான் இந்த சொடக்கு தக்காளி செடி. இதனை நாம் சிறு வயதில்  பறித்து விளையாடிக் கொண்டு இருந்திருப்போம். ஆனால் இந்த சொடக்கு தக்காளியை வெளிநாடுகளில் பல மடங்கு பணம் கொடுத்து வாங்குகிறார்கள்.

இந்த சொடக்கு தக்காளி உடம்பில் இருக்கும் நோய்களை விரட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் மிகையல்ல. சொடக்கு தக்காளி எவ்வளவு மருத்துவ குணம் வாய்ந்த தக்காளி என்று நாம் இந்த பதிவில் (sodakku thakkali payangal in tamil) பார்க்கலாம்.

சொடக்கு தக்காளி பயன்கள்

இந்த சொடக்கு தக்காளியை (sodakku thakkali in english)ஆங்கிலத்தில் cutleaf ground cherry,cape gooseberry, ground cherry,physalis minima. என பல வகை பெயர்கள் உள்ளன. சொடக்கு தக்காளியை உண்பதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது.

சொடக்கு தக்காளியில் கொழுப்பு, சோடியம் இல்லை. இது இரத்தத்தில் உள்ள சக்கதை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் பழுத்த இரண்டு சொடக்கு தக்காளியை சாப்பிட்டு வந்தால் சக்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

சொடக்கு தக்காளியில் வைட்டமின் A, B, B1, B2, B3, C, முக்கியமாக இதில் இரும்பு சத்து அதிக அளவில் காணப்படுகிறது.

இதில் வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு செய்து, நம் உடலை கிருமிகளிடம் இருந்து பாதுக்காக்கிறது.

மேலும் நீண்ட நேரம் கம்யூட்டரில் வேலை செய்பவர்கள் இந்த சொடக்கு தக்காளியை சாப்பிட்டு வந்தால் கண் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகிவிடும்.

இந்த தக்காளியில் கால்சியம், பாஸ்பரஸ் உள்ளதால் எலும்புகளுக்கு வலு கொடுக்கிறது.

கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு இது சிறந்த தீர்வாகும். மேலும் இதில் வைட்டமின் பி உள்ளதால் நரம்பு மண்டல தொடர்பான பிரச்சனையை சரிசெய்கிறது.

மேலும் செரிமானத்திற்கு தேவையான பெக்டின் என்ற சத்து சொடக்கு தக்காளியில் உள்ளதால் இதனை தினமும் உணவில் எடுத்துக்கொள்ளலாம்.

சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு இது சிறந்த தீர்வாகும். மேலும் இது புற்றுநோய் செல்கள் உருவாதை தடுக்கிறது. உடல்வலி, மூட்டு வலி போன்ற வலிகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

Sodakku Thakkali

மேலும் இது வெளிநாடுகளில் நம் நாட்டின் பணத்திற்கு இதன் விலை கிலோ மூன்றாயிரம் வரை விற்கப்படுகிறது. எனவே இந்த செடி உங்கள் வீடுகளில் (sodakku thakkali medicinal benefits in tamil) வளர்ந்தால் பறித்து எறிந்துவிடாதீர்கள்.

மேலும் படிக்க: சிறுநீரக கற்களை போக்கும் பொங்கல் பூ..!! சிறுகண் பீளையின் பயன்கள் கேட்டால் அசந்து போயிடுவீங்க..!!