விடிய விடிய கனமழை பெய்தது இதன் காரணமாக ஏற்காடு சாலை பகுதியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு செல்ல முடியாமலும் ஏற்காடு மலையில் இருந்து கீழே வர முடியாமலும் தவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாகவே பலத்த மழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. சாலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வளைவைத் தாண்டி தண்ணீர் விழுகிறது. ஏற்காட்டு மலைப்பாதையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கனமழையால் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு 50 அடி நீளத்திற்கு சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.