நாளை(ஜூன் 10) வரும் சூரிய கிரகணம்! இதையெல்லாம் செய்யக்கூடாது!

0
170

வருகிற ஜூன் 10ஆம் தேதி அன்று இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ உள்ளதாக நாசா வரைபடத்தை வெளியிட்டு உள்ளது. நாசா பூமியின் மேற்பரப்பு முழுவதும் சூரிய கிரகணத்தின் பாதையை காட்டும் வரை படத்தை வெளியிட்டுள்ளது. இது ஜூன் 10ஆம் தேதி நிகழும் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டும் சூரிய கிரகணம் ஜூன் 10ஆம் தேதி அன்று தெரியும். இந்த அரிய நிகழ்வை உலகின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும் என்பதால் அனைவராலும் பார்க்க முடியாது என்று கூறுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் செல்லும்பொழுது வருடாந்திர சூரிய கிரகணம் தோன்றும்.

சூரியனின் முழுப் பார்வையையும் சந்திரன் தடுக்காது. இது ஒரு நெருப்பு வளையத்தை உருவாக்கும். இதனை சூரிய கிரகணம் என்கிறோம்.
இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சி நாசா ஒரு வரைபடத்தை வெளியிட்டு இது பூமியின் மேற்பரப்பு முழுவதும் 2021 சூரியகிரகணத்தின் பாதையை காட்டுகிறது என்று கூறியுள்ளது. இந்தியாவில் சூரிய கிரகணம் தெரியும் என்று அது வெளிப்படுத்துகிறது.

ஆனால் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இருந்து மட்டுமே அதை காண முடியும். மற்றவர்கள் அதை ஆன்லைன் மூலம் பார்க்கலாம் என்று சொல்லுகிறார்கள்.

லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை மையமாகக் கொண்ட வர்கள் சூரிய கிரகணத்தை 12.25 மணிக்கு காண தொடங்குவார்கள் என்று தெரிவிக்கிறது.

ஒரு பகுதி சூரிய கிரகணத்தை மட்டுமே அவர்களால் காண முடியும். மேலும் இந்த அண்ட நிகழ்வானது அவர்களுக்குப் 12.51 வரை நீடிக்கும் என்று கூறியுள்ளது.

மேலும் இதர நாடுகளான கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா, ஐரோப்பா ,ஆசியா, மற்றும் வட ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் உள்ள மக்கள் ஜூன் 10ஆம் தேதி அன்று கிரகணத்தை பார்க்க முடியும் என்று நாசா கூறுகிறது.

சூரிய உதயத்திற்கு முன்பும், சிறிது நேரத்தில் கிரகணம் ஏற்படும் என்று கூறுகிறது. இங்கு பெரும்பாலான பகுதிகளில் சூரிய கிரகணம் நிகழ்வு பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கி மாலை 6.45 வரை நீடிக்கும்.

இந்த வருடாந்திர சூரிய கிரகணம் இந்தியாவில் அனைவருக்கும் தெரியாது. ஆனால் நீங்கள் இந்த வான நிகழ்வை ஆன்லைன் மூலம் பார்க்கலாம். Timeanddate.com இந்த வலைத்தளத்தில் ஏற்கனவே சூரிய கிரகணத்தின் நேரடி ஸ்ட்ரீம் இணைப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் நீங்கள் 10ஆம் தேதியன்று நடைபெறும் நிகழ்வை ஆன்லைனில் பார்க்கலாம்.

செய்பவை, செய்யக்கூடாதவை:

1. சூரியனை நேரடியாக உற்றுப் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்கள். இந்த வான நிகழ்வை நேரடியாக ஒருவர் காண வேண்டுமெனில் பாதுகாப்பு அங்கீகாரம் பெற்ற சூரிய கிரகணத்தை பார்க்கும் கண்ணாடிகளை அணியலாம்.
2. பின்ஹோல் கேமரா அல்லது பாக்ஸ் ப்ரொஜெக்டர் கொண்டு சூரிய கிரகணத்தை காணலாம்.
3. தொலைநோக்கிகள் மற்றும் கேமரா மூலம் கிரகணத்தை படம் எடுக்க வேண்டும் என்று விரும்புவர்கள் உங்கள் லென்ஸின் பாதுகாப்பு அங்கீகரிக்கப்பட்ட சூரிய கிரகணத்தை பிடிக்கும் வடிப்பானை பயன்படுத்த வேண்டும்.

Previous articleகுறைந்தது நோய் தொற்று பாதிப்பு! நம்பிக்கையூட்டும் மத்திய அரசு மகிழ்ச்சியில் மக்கள்!
Next article14 ஆம் தேதி கூடுகிறது அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்! வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு!