தண்ணீரில் மிதக்கும் சோலார் பேனல் ! கோவை மாநகராட்சியின் புதிய முயற்சி !

Photo of author

By Rupa

கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் சோலார் பேனல் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு கோவை மக்களின் மின்சாரா தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வகையில் தமிழகத்தில் முதன் முதலாக தண்ணீரில் மீதக்கும் சோலார் பேனல்களை கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்க விட்டு அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க உள்ளதாக கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கபட்ட நிலையில் அதற்கான முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஜெர்மன்நாட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த சோலார் பேனல் திட்டம் நடைபெற்று வருகிறது.

சோலார் பேனல்கள் குளத்தில் மிதக்கும் வகையில்  உக்கடம் குளத்தின் ஒரு பகுதியில் அரை ஏக்கர் பரப்பளவில் மிதக்கும் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் போது சேதம் அடையாமல் இருக்க நங்கூரம் மூலம் நிருத்தப்பெற்றுள்ளது. குளத்தில் தண்ணிர் ஏறும் குறையும் போதும் தகடுமீதவை மேல் கீழ் செல்லும் வகையில் அமைக்கப்பெற்று உள்ளது.

 இந்த தகடுகள் மேல் சோலார் பேனல் பொருத்தப்படுகிறது. இவற்றை பாதுகாக்க இரவிலும் தெளிவாக பார்க்கும் வகையில் கண்காணிப்பு கேமாரட் கள் பொருத்தப்பட்டுள்ளது. குளத்தின் மையத்தில்  மிதவையில் பொருத்தப்பட்டுள்ள  சோலார் பேனலை உக்கடம் மேம்பாலத்தில் இருந்து பார்க்க முடியும். இத் திட்டத்திற்கு ரூ 1கோடியே 45லட்சம் செலவு ஆனதாகவும். இந்த சோலார்  பேனல் மூலம் 154 கிலோ வாட் மின்சாரத்தை தினந்தோறும் உற்பத்தி செய்யப்படும் என்று கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.