கொரோனா நோய்தொற்றின் பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம்,சானிடைசர் உபயோகிப்பது அவசியம்.கடைகளுக்கு, அலுவலகத்திற்கு சென்றால் கைகளில் சானிடைசர் ஊற்றி தூய்மைப்படுத்த சொல்கின்றார்கள். பெரிய நிறுவனங்கள், அலுவலகங்களில் திரவ சோப்பை, கைகழுவும் இடத்தில் வைத்திருக்கிறார்கள்.
திரவ சோப்பை, கைகளில் தடவி தண்ணீர் குழாய்களை திறந்து கை கழுவி கொள்கிறோம். குழாய்களைத் திறக்கும்போது கையில் உள்ள வைரஸ் ஒட்டிக் கொண்டாள், அடுத்து கைகழுவ குழாயை திறப்பவர்களின் கையில் ஒட்டி தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த பிரச்சினையை தீர்க்கும் விதமாக ஆப்பிரிக்காவின் கானா நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் ஏனிங் என்ற மாணவன், வித்தியாசமான கைகழுவும் மிஷின் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
இதில் இரண்டு குழாய்கள் உள்ளது. ஒன்றிலிருந்து திரவமும் மற்றொன்றிலிருந்து தண்ணீரும் வெளிவரும். சென்சார் மூலம் இயங்கும் இந்த கருவியில் உள்ள குழாய்களில் அருகில் கைகளைக் கொண்டு சென்ற உடனே கைகளில் சோப்புத் திரவம் கொட்டும், அடுத்து தண்ணீர்க் குழாயிலிருந்து தண்ணீர் வெளிவரும். கைகளை 25 நிமிடங்களுக்கு மேல் கழுவினால் கருவின் எச்சரிக்கை செய்யும்.
இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், சென்சார் இயங்குவதற்கான மின்சக்தியை இந்த அமைப்பில் பொருத்தப்பட்டுள்ள சூரியஒளி தகடுகள் தருகின்றன.
எனவே, இது இயங்கத் தேவையான மின்சாரத்தை தானே உருவாக்கிக் கொள்வதால், இந்த கருவியை எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.