சூரியன், நிலவு, பூமி என மூன்றும் ஒரே நேர் கோட்டிற்கு வருகின்றன. இதனால் சூரிய வெளிச்சத்தை சில மணி நேரம் நிலவு மறைக்கும். சூரியனை முழுவதுமாக நிலவு மறைப்பதால் முழு சூரிய கிரகணம் என படுகிறது.
சூரியனை நிலா முழுமையாக மறைத்தால் அது முழு சூரியனின் மையப் பகுதியை மட்டும் சந்திரன் மறைத்து விளிம்பில் வளையம் போல விழுகிறபோது அது வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த அரிய நிகழ்வு இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கிய இந்த கிரகணம் 11.16 வரை தெரியும் மக்கள் வெறும் கண்களில் பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காக, மாநிலம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழ் நாடு அறிவியல் இயக்கம் செய்துள்ளது. சென்னையில் பிர்லா கோளரங்கம் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பகுதிகளுக்கு ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று, சூரிய கண்ணாடி மூலமாக கிரகணத்தை பார்த்து ரசித்தனர்.
இதற்கு பிறகு 2031 ஆம் ஆண்டு தான் தமிழ்நாட்டில் மதுரை மற்றும் தேனியில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.