பிறப்புறுப்பில் அரிப்பா:? வெளியே சொல்ல கூச்சமா? கவலை வேண்டாம்! எளிமையான வீட்டு வைத்தியம் இருக்கு!

0
430

பெண்களின் மாதவிடாய் சமயத்திலும்,இருக்கமான உடை அணிந்த சமயத்திலும் பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவது உணர்வர்.குறிப்பாக உடல் பருமன் அதிகமுள்ள பெண்களுக்கு அந்தரங்க பகுதியில் அரிப்பும்,அந்தரங்க பகுதியை சுற்றி கருப்பாகவும் இருப்பதை உணருவர்.இதை பெண்கள் தன் தாயிடம் சொல்லக்கூட கூச்சப்படுவார்.அந்தரங்க பகுதியில் அரிப்பு மற்றும்,அந்த பகுதியில் உள்ள கருமை நீங்க எளிமையான வழிகள் உங்களுக்காக.

அரிப்பு நீங்க :

பெண்கள் மாதவிடாய் நேரத்தின்போது நாப்கின் பயன்படுத்துவதால்,மற்றும் இறுக்கமான உடை அணியும் போதும் ஏற்படும் அரிப்புக்கு தேங்காய் எண்ணெய் மிக சிறந்த மருந்தாகும்.

அந்தரங்க பகுதியை சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்துவிட்டு,பின்பு சிறிது தேங்காய் எண்ணெய் அரிப்பு இருக்கும் பகுதியில் தேய்த்தால் உடனடியாக அரிப்பு நின்றுவிடும்.மேலும் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் இரவு தூங்குவதற்கு முன்பு அந்த பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவி தூங்கினால் அரிப்பு மேலும் ஏற்படாமல் தடுக்கலாம்.

அந்த பகுதியில் உள்ள கருமை நிறம் போக்க எளிய வழி?

ஒரு டீஸ்பூன் வேம்பு பவுடரில் சிறிதளவு கற்றாழை ஜெல்லை சேர்த்து அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்றாக கலக்கி கருமை உள்ள இடத்தில் தொடர்ந்து 2 வாரங்கள் அப்பிளே செய்து வந்தால் அந்த பகுதியில் உள்ள கருமை நீங்கும்.

வேம்பு பவுடர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.நேரம் இருப்பவர்கள் வேப்பிலையை அரைத்து,கற்றாளை சோற்றை எடுத்து அதில் மஞ்சள் தூளை கலந்து தேய்க்கலாம்.

Previous articleசாம்பியன்ஸ் லீக்கில் மெஸ்ஸி சவாலை பேயர்ன் மியூனிக் நட்சத்திரம் கோரெட்ஸ்கா மகிழ்வித்தார்
Next articleஅவர் மிகவும் சிறந்தவர் ‘- ஹாலண்ட் போருசியா டார்ட்மண்ட் சிறுவன் மவுகோகோ பிரகாசிக்க ஆச்சரியப்படுகிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here