சொமேட்டோ நிறுவனத்தின் சேவை இனி இங்கு  இல்லை! உணவு விநியோகத்தை முற்றிலும் நிறுத்த முடிவு!

Photo of author

By Parthipan K

சொமேட்டோ நிறுவனத்தின் சேவை இனி இங்கு  இல்லை! உணவு விநியோகத்தை முற்றிலும் நிறுத்த முடிவு!

Parthipan K

Somato's service is no longer here! Decision to completely stop food distribution!

சொமேட்டோ நிறுவனத்தின் சேவை இனி இங்கு  இல்லை! உணவு விநியோகத்தை முற்றிலும் நிறுத்த முடிவு!

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஸ்மார்ட் போன்க்குள் அடங்கி விட்டது. அனைத்து விதமான பண பரிவர்த்தனைகளும் போன் மூலமாகவே செய்து கொள்ள முடியும். மேலும் தற்போது நாம் வீட்டில் இருந்தப்படியே நமக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் வாங்கி கொள்ளும் வசதி வந்துவிட்டது. அதற்கான எண்ணற்ற செயலிகள் வந்துவிட்டது. அதில் மிக புகழ் பெற்றது என்றால் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தான்.

பொருட்களுக்கு மட்டுமின்றி தற்போது உணவுகளையும் ஆடர் செய்தால் வீட்டு தேடி வந்துவிடும். அதில் முதன்மையாக இருப்பது சொமேட்டோ தான். சொமேட்டோ தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 3 ஆம் காலாண்டுக்கான வருமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் நிறுவனம் ரூபாய் 346.6 கோடி நஷ்டமடைந்துள்ளது. அதன் காரணமாக 225 சிறிய நகரங்களில் தன் சேவைகளை நிறுத்தவுள்ளனர். இது தொடர்பாக சொமேட்டோ  நிறுவனம் கூறுகையில் இந்த நகரங்களின் சேவைக்கான வரவேற்பு ஊக்கமளிக்கும் அடிப்படையில் இல்லாததால் நிறுத்தப்படுகிறது என கூறியுள்ளது.

மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே 225 நகரங்களில் உணவு விநியோக சேவை நிறுத்தபட்டுள்ளது என அந்த நிறுவனத்தின் நிதி வருவாய் அறிக்கையில் கூறியுள்ளது. அதனை தொடர்ந்து சொமேட்டோ நிறுவனம் கூறுகையில் மொத்த வருவாயில் 0.3 சதவீதம் தான் என தெரிவித்துள்ளது. எந்தெந்த நகரங்களில் சொமேட்டோ அதன் சேவையை நிறுத்தி உள்ளது என்பதன் பற்றிய தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.