அமெரிக்காவில் உள்ள யார்க் என்ற கடற்கரையில் நடந்த கொண்டு இருக்கும் பொழுது, பாதம் கருப்பாக மாறியுள்ளது. ஒருவாரம் ஆன பின்பும் அந்த நிறமாறாததால், அதை சோதித்த பொழுது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு காரணம் என்னவென்று புரியவில்லை என்று பரிசோதனை செய்து வருகிறார்கள்.
தெற்கு முனையில் உள்ள யார்க் கடற்கரையில் ஜெனி கிரீன் லிப் என்பவரும் அவரது கணவரும் வழக்கமாக அந்தக் கடற்கரையில் நடைப் பயணத்தில் வெறுங்காலுடன் சென்றுள்ளனர்.
சிறிது நேரம் நடந்து விட்டு அவர்கள் அங்குள்ள கடற்கரையில் நாற்காலிக்கு திரும்பி காலில் இருந்த மணலை துடைக்க துவங்கும் பொழுது தான், அவர்கள் இருவரின் கால்கள் கருப்பு நிறமாக மாறி இருப்பதை கவனித்தனர்.
இதைப்பற்றி கிரீன் லிப் கூறியபொழுது இதுபோன்ற இதற்கு முன் நான் எதையும் பார்த்ததில்லை, நான் கரித்துண்டுகள் மீது நடந்ததைப் போலவே என் கால்கள் இருந்தன என்று கூறினார்.
பின் வீட்டிற்கு சென்று கால்களை நன்றாக கழுவித் துடைத்து உள்ளனர். ஆனால் ஓரளவுக்கு மட்டுமே அந்த நிறம் போய் உள்ளது. இதுபோன்ற மைனேயின் தெற்கு கடற்கரையில் உள்ள அண்டை நாடான நியூ ஹாம்ப்ஷயரீலும் பலர் தங்கள் கால்களில் கறுப்பு கறைகள் படிந்து உள்ளதாக தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை யார்க் கடற்கரைக்கு மேற்கே 14 மைலில் தொலைவிலுள்ள கிரேட் ஐலன்ட் காமன் கடற்கரைக்கு சென்றதிலிருந்து எனது கால்கள் கருப்பு நிறங்களை கொண்டுள்ளது. என்னால் மறுபடியும் என் காலில் நிறத்தை பெற முடியவில்லை என்று பலர் கூறியுள்ளார்.
யார்க் நகரத்தில் உள்ள பூங்கா மற்றும் பொழுதுபோக்கு இயக்குனர் ராபின் கோகர் அவருக்கு இந்த வாரம் மட்டும் தங்களது கரைபடிந்த கால்களைப் பற்றி சுமார் 100 அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் அவருக்கு வந்ததாக கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் இதேபோன்று அறிக்கைகள் தெற்கிலிருந்து கிளஸ்டர், மாசசூசெட்ஸ் மற்றும் வடக்கே வெல்ஸ் மைனே -70 மைல்களுக்கு மேல் இது போன்ற நிகழ்வுகள் நடந்ததாக பரவி வருகிறது.
ஹவாயில் மணல் எரிமலை வாயுவிலிருந்து கருப்பாக மாற கூடும். ஆனால் மைனேயில் எரிமலைகளில் இல்லை. எப்படி இந்த நிறங்கள் மாறின. இது கண்டிப்பாக ஏதாவது ஒரு பிரச்சனையாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவிவருகிறது.
இதற்கு வேளாண்மை மற்றும் பாதுகாப்பு வனவியல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜிம் பிரட் என்பவர் விடை அளித்து உள்ளார். கடற்பாசிக்கு உணவளிக்கும் மில்லியன் கணக்கான சிறிய கருப்பு ஈக்கள் கடற்கரையில் முழுவதுமாக இறந்து கிடக்கிறது என்று தெரிவித்தார்.
ஆனால் ஏன் என்று தெரியவில்லை என்று அவர் கூறினார். இயற்கை எதிர்மாறான விஷயங்களை செய்து வருகிறது. அதில் இதுவும் ஒரு நிகழ்வாக இருக்கலாம் என்று கூறினார். கரை ஒதுங்கிய மணலில் உள்ள அந்த பூச்சிகளில் இயற்கையாக உருவாகும் நிறமி உள்ளது என்று அவர் கூறினார்.
இது எப்படி வந்தது என்று சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதன்மீது காலடி வைப்பது எந்த ஒரு சுகாதார பிரச்சனையையும் ஏற்படுத்தாது என்று அவர் கூறினார்.
இதை நாய்கள் உண்பதால் நாய்களுக்கு தொற்று ஏற்படுமா? என்ற கேள்விக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை.
ஓய்வு பெற்ற கடல்சார்வியலாளர் லிண்டா என்பவர் யார்க் கடற்கரையில் உள்ள மணலை ஆய்வு செய்ய மாதிரியை சேகரித்து நுண்ணோக்கியின் வழியாக பார்த்தபோது தான் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது.
ஒரு சிறிய முள்ளின் நுனி அளவுள்ள மணலில் மில்லியன் கணக்கில் சின்ன சின்ன ஈக்கள் மற்றும் பூச்சிகள் இருந்துள்ளன. இவை ஒன்று 2 இறக்கைகளை கொண்டுள்ளது. மற்றொன்று நான்கு இறக்கைகளை கொண்டுள்ளது. ஆனால் கண்டிப்பாக அனைத்தும் இறந்து விட்டது. என அவர் தெரிவித்தார்.
இதற்கு முன் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டதாக அவர் நினைவில் இல்லை என்று கூறியுள்ளார்.
மைனி கடற்கரையில் 40 ஆண்டுகளாக கடற்கரைகளில் புவியியலில் பணியாற்றியுள்ளேன். இது போன்ற எதையும் நான் பார்த்ததில்லை வேறு எங்கும் கேள்விப்பட்டதும் இல்லை என்று லிண்டா தெரிவித்துள்ளார்.
இது போன்ற நிகழ்வுகளை கண்டிராத மக்கள் அனைவரும் பயத்தில் மூழ்கியுள்ளனர்.