ரவி மோகன் என்ற இயற்பெயரைக் கொண்டு ஜெயம் ரவி அவர்கள், தன்னைக் குறித்து தன் மகன் பேசியதையும் அதற்காக தான் செய்த சில விஷயங்களையும் குறித்து ரசிகர்களிடையே பகிர்ந்து இருக்கிறார். இது குறித்த முழு செய்தியை இந்த பதிவில் காண்போம்.
நடிகர் ஜெயம் ரவி அவர்கள் சிறந்த நடன கலைஞர் ஆவார்.அவர் பரதநாட்டிய நடனக் கலைஞர் நளினி பாலகிருஷ்ணனிடம் நடனம் பயின்றார் மற்றும் தனது 12 வயதில் தனது அரங்கேற்றத்தை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா துறையில் நடிகராக மட்டுமின்றி உதவிய இயக்குனராகவும் பணிபுரிந்தவர் நடிகர் ஜெயம் ரவி ஆவார். சமீப காலத்தில் இவருக்கும் இவருடைய மனைவியான ஆர்த்திக்கும் விவாகரத்து குறித்த பல கருத்துக்கள் வெளிவந்த நிலையில், அதனை ஜெயம் ரவி அவர்களே வெளிப்படையாக கூறியிருந்தார்.
மேலும் இவர்களது விவாகரத்து குறித்த முதல் கவுன்சிலிங் சென்று வந்த பிறகும், ஜெயம் ரவி அவர்கள் விவாகரத்து பெறுவதில் நிலையாக உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி இருந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகர் ஜெயம் ரவி அவர்கள் ஷூட்டிங் பாடல் தன் மகனுடன் நடந்த சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
அவர் பகிர்ந்த தகவல் :-
சூட்டிங் ஸ்பாட்டிற்கு என்னுடைய மகன் ஆரவ் வந்த பொழுது, நான் நடன காட்சிகளில் நடித்த கொண்டிருந்தேன். அப்பொழுது என்னை பார்த்த என் மகன் என்னப்பா வயதாகி விட்டதா என்று கேட்டு விட்டான். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் அதே நடனத்தை நான் ஆடியோ பொழுது என்னுடைய மகன், அதைப் பார்த்து நீங்க செஞ்சிட்டிங்களே என சந்தோஷமாக கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார்.