அரசு வேலைக்காகத் தந்தையவே கொன்ற மகன்! காவல்துறையின் திடுக்கிடும் தகவல்

Photo of author

By Pavithra

தெலங்கானாவில் கருணை அடிப்படையில் அரசு வேலை பெறுவதற்காக தந்தையை கொன்ற மூத்த மகன். காவல்துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல்.இதுகுறித்து ராமகுண்டம் காவல்துறை ஆணையா் வி.சத்யநாராயணா கூறியது.

பெத்தபள்ளி மாவட்டம் கோதாவரிகானி பகுதியில் உள்ள பொதுத்துறை நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 55 வயது நபர் பணிபுரிந்து வந்தார். இவர் கோதூா் கிராமத்தை சேர்ந்தவர். கோதாரில்லுள்ள தனது வீட்டில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக, அவரது மனைவி மற்றும் இரு மகன்கள் உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.

அதனைத்தொடா்ந்து இறுதிச் சடங்குக்கும் ஏற்பாடு செய்தனா்.எனினும் உயிரிழந்தவரின் உறவினா்களில் சிலா் சந்தேகமடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அவரது மகன்களை வற்புறுத்தியுள்ளனா். இதனால் தந்தையை கொன்ற மூத்த மகனே (25 வயது) காவல்துறைக்கு சந்தேகம் வராமல் இருக்க தகவல் தெரிவித்தாா்.

தகவலின் அடிப்படையில் நிகழ்விடம் சென்ற காவல்துறையினா், சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனா். பின்னர் திடுக்கிடும் உண்மை வெளிவந்தது.அவர் மாரடைப்பால் சாகவில்லை கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது.

இதனைத்தொடா்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தில் மற்றும் உறவினர்கள் இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவரின் வேலையை கருணை அடிப்படையில் பெறுவதற்கு அவரது மூத்த மகனே அவரை கழுத்தை நெறித்து கொன்றது தெரியவந்தது. இதற்கு அவரது தாயும், இளைய சகோதரரும் உடந்தையாக இருந்துள்ளனா் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இரு மகன்களையும் கைது செய்த காவல்துறையினா், தலைமறைவாக உள்ள அவா்களின் தாயை தேடி வருகின்றனா் என்று தெரிவித்தாா்.