மனைவியிடம் தகராறு செய்த கணவன்; தட்டிக் கேட்ட மகனைக் கொல்ல முயற்சி – கொடூரத் தந்தைக்கு இறுதியில் நேர்ந்த முடிவு

Photo of author

By Parthipan K

மனைவியிடம் தகராறு செய்த கணவன்; தட்டிக் கேட்ட மகனைக் கொல்ல முயற்சி – கொடூரத் தந்தைக்கு இறுதியில் நேர்ந்த முடிவு

Parthipan K

Updated on:

மனைவியிடம் தகராறு செய்த கணவன; தட்டிக் கேட்ட மகனைக் கொல்ல முயற்சி – கொடூரத் தந்தைக்கு இறுதியில் நேர்ந்த முடிவு

மேட்டுப்பாளையத்தில் 6 வருடமாகப் பிரிந்து வாழும் மனைவியிடம் தகராறு செய்த மனிதரை அவரது மகனே வெட்டிக் கொலை செய்துள்ளார்.

மேட்டுப்பாளையம் சிராஜ் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு அமுதவள்ளி எனும் மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். கருப்பசாமி, குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் 6 ஆண்டுகளாக இவரது மனைவி அமுதவள்ளியும் குழந்தைகள் இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் அவர்களை நிம்மதியாக வாழவிடாமல் அவ்வப்போது வந்து தகராறு செய்து வந்துள்ளார் கருப்பசாமி.

வழக்கம்போல நேற்று இரவு குடிபோதையில் இருந்த கருப்பசாமி மனைவிக்கு போன் செய்து வீட்டுக்கு அழைத்துள்ளார். அவரை நம்பிய அமுதவள்ளி தனது மூத்த மகன் சச்சின் குமாரை அழைத்துக்கொண்டு கருப்பசாமியின் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கே கருப்பசாமி மீண்டும் பிரச்சனை செய்ய ஆரம்பித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை பார்த்து கடுப்பான மகன் சச்சின் தந்தையிடம் தாய்க்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி ஆத்திரத்தில் சச்சினை வெட்ட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியான சச்சின் அவரிடம் இருந்த அரிவாளை பிடுங்கி தந்தையை கழுத்து மற்றும் தலையில் வெட்டியுள்ளார்.. இதில் கருப்பாசாமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இது சம்மந்தமாக போலீஸுக்கு தகவல் செல்ல அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கருப்பசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு  அனுப்பியுள்ளனர். மேலும் கொலையாளி சச்சினைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.