தந்தையை போலவே மகன் !! அறிமுக போட்டியில் சதமடித்து அசத்திய அர்ஜுன் தெண்டுல்கர்!!
அறிமுகமான முதல் ரஞ்சி கிரிக்கெட் போட்டியிலேயே சதமடித்து சச்சினின் மகன் அர்ஜுன் தெண்டுல்கர் சதமடித்துள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் ஆன சச்சினின் மகன் தந்தையை போலவே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு அசத்தி வருகிறார். மிகப்பெரும் கிரிக்கெட் வீரரின் மகனான அர்ஜுனுக்கு ஐ.பி.எல். லீக்கில் அவரின் தந்தை விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் மற்றொரு அணியான கோவா அணிக்காக விளையாடி வந்தார். மும்பை மற்றும் கோவா அணிகளுக்காக அர்ஜுன் விளையாடி இதுவரை 7-டெஸ்ட் போட்டிகள் மற்றும் 9, 20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
கோவா-போர்வோரோமில் நடைபெறும் ரஞ்சி கோப்பைக்கான போட்டியில் கோவா- ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்நிலையில் இந்த போட்டியில் ரஞ்சி கோப்பையில் அர்ஜுன் தெண்டுல்கர் அறிமுகம் ஆகியுள்ளார். இதில் கோவா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.முதல் நாள் முடிவில் கோவா அணியானது 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து இருந்தது. பிரபு தேசாய் 81, அர்ஜுன் தெண்டுல்கர் 4, ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
அதனையடுத்து இன்று நடந்த போட்டியில் இரண்டு வீரர்களும் சிறப்பாக ஆடி சதம் அடித்து அசத்தியுள்ளனர். 23 வயதாகும் அர்ஜுன் தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். சச்சினும் தனது அறிமுக ரஞ்சி (11, டிசம்பர் 1988)ஆட்டத்தில் சதம் அடித்து விளாசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரை போலவே அவரது மகனும் இந்த போட்டியில் (14 டிசம்பர் 2022) சதமடித்துள்ளார்.
இதுவரை கோவா அணி 5 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் எடுத்து பிரபு தேசாய் 172, அர்ஜுன் தெண்டுல்கர் 112, ரன்களுடனும் விளையாடி வருகிறது.