திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி அவர்களுடைய மகன் இந்திரஜித் பாரதிய ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி தங்களுடைய பணிகளை வேகப்படுத்தி இருக்கின்ற நிலையில், வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன்பே பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது திமுக. இது ஒருபுறமிருக்க வேல் யாத்திரை மூலமாக பாரதிய ஜனதா கட்சி மக்களிடையே நம்பிக்கையை உருவாகி வருகின்றது கடவுள் முருகனை ஒரு சிலர் இழிவாக பேசிய காரணத்தால் இந்த யாத்திரை நடத்தப்படுவதாக அந்த கட்சியினர் தெரிவித்தாலும் கூட இது ஒரு அரசியல் செயலாகவே பார்க்கப்படுகின்றது.
பாஜகவுடன் அதிமுக எதிர்வரும் சட்டசபை தேர்தலிலும் கூட்டணி அமைக்கும் என்பது உறுதியான போதிலும், உறுப்பினர்கள் சேர்க்கையில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் நடிகை குஷ்பூ, பாடகர் மோகன் வைத்யா ,நடிகை நமிதா, காயத்ரி ரகுராம், போன்ற பலர் அந்த கட்சியில் இணைந்து இருக்கிறார்கள் இந்த நிலையிலே திமுகவின் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்த பரிதி இளம்வழுதியின் மகன் இந்திரஜித் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் அவர்களின் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.