தயாரானது ரஜினி கட்சியின் நிர்வாகி பட்டியல்!

0
77

ரஜினிகாந்த் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. முன்னரே ரஜினிகாந்த் தெரிவித்ததை போல டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனவும், அதை அடுத்து ஜனவரி மாதத்தில் கட்சி ஆரம்பிப்பதும் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சுமார் கால் நூற்றாண்டு காலங்களாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அவருடைய ரசிகர்களுக்கு இந்த தகவல் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது . ஆனாலும் இதனை பத்திரிகையாளர்கள் இடையே தெரிவிக்கும்போது ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு ஒரு நெருடல் இருந்தது என்று சொல்லலாம். தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜகவிலிருந்து வெளிவந்த அர்ஜுன மூர்த்தியும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும் அறிவிக்கப்பட்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் அவர்களால் அறிவிக்கப்பட்ட இரு பொறுப்புகளிலும் ஒரு பொறுப்புகளில் கூட ரஜினிக்காக இத்தனை வருடங்கள் காத்திருந்த அவருடைய படங்களுக்கு சுவரொட்டிகளை ஒட்டி திரையரங்குகளில் விசில் அடித்த ரசிகர்களுக்கு கிடையாது என்பதே அவருடைய ரசிகர்களின் மனதில் ஏற்பட்ட அந்த நெருடலுக்கு காரணம் என்கிறார்கள்.

ஏனென்றால், பாபா திரைப்படம் பிரச்சினைக்கு உள்ளான நேரத்தில் திரையரங்குகளில் பாட்டாளி மக்கள் கட்சியினரை நேருக்கு நேராக சந்தித்தவர்கள் அவருடைய ரசிகர்கள். ஒரு சில இடங்களில் அடிதடியும் கூட நடைபெற்றன அதில் சிக்கியவர்கள் ரஜினிகாந்த உடைய ரசிகர்கள்தான். இவ்வாறு இருக்கும்போது எதிலுமே சம்பந்தப்படாத இருவரை எவ்வாறு தலைமை பொறுப்பிற்கு ரஜினிகாந்த் தேர்வு செய்தார் என்ற கேள்வியும் அவருடைய ரசிகர்கள் மனதில் எழாமல் இல்லை.

இதுதொடர்பாக ரஜினிகாந்த் ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது தலைவர் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் அவர் சொல்வதை போல நாங்கள் செயல்படுவோம் அவர் அறிவித்திருக்கும் இந்த அறிவிப்புக்கு நாங்கள் மதிப்பு அளிக்கின்றோம் ஆனாலும் தலைமைப் பொறுப்புகளில் ஒன்றிலாவது ரஜினியின் மக்கள் மன்ற பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம், ஏனென்றால் இதற்குமேல் பொறுப்புகளில் ரசிகர்கள் நியமிக்கப்பட்டாலும் கூட யாருக்கு என்னென்ன பொறுப்புகள் கொடுக்கவேண்டும் என்பதை இப்போது இருக்கின்ற அர்ஜுன மூர்த்தியும் தமிழருவி மணியனும் தான் முடிவு எடுப்பார்கள் அப்படியானால் இத்தனை வருடங்கள் யார் யார் என்னென்ன வேலைகளை எல்லாம் செய்தார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. ஆகவே அவருடைய ரசிகர்களான எங்களில் ஒருவரை நிர்வாகி பொறுப்பில் நியமனம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றோம் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நாளை ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ரஜினிகாந்தின் ரசிகர்கள் அடங்கிய ஒரு நிர்வாக குழு பட்டியலை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சென்ற சில நாட்களாகவே அர்ஜுனன் மூர்த்தி அதோடு தமிழருவி மணியன் ஆகிய இருவருடனும், நடிகர் ரஜினிகாந்த் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் இன்று கூட ரஜினிகாந்த வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த ஆலோசனையில் மாவட்டத்திற்கு ஒருவர் என்ற பட்டியலை வெளியிடலாமா அல்லது 20 பேர் கொண்ட குழு பட்டியலை வெளியிடலாமா என்ற விவாதம் நடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.