கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது பிரபல நடிகை மரணம்!

Photo of author

By Vinoth

கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது பிரபல நடிகை மரணம்!

நடிகை சோனாலி போகத் இதயமுடக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் டிக் டாக் பிரபலமான சோனாலி போகத் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட இவர் சமூகவலைதளங்களில் அதிகளவில் பாலோயர்களை பெற்றிருந்தார். தற்போது தனது சில ஊழியர்களுடன் கோவாவுக்குச் சென்றிருந்தார்.

திங்கள்கிழமை இரவு அவர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட போது கோவா மாவட்டத்தில் உள்ள அஞ்சுனாவில் உள்ள செயின்ட் அந்தோணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் அங்கு செல்வதற்கு முன்பாகவே உயிரிழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

சோனாலி, 13 மணி நேரத்திற்கு முன்புதான் சமூகவலைதளத்தில் தன்னுடைய புதிய படத்தை வெளியிட்டு இருந்தார். சோனாலி போகட்டின் உடல் கோவாவில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மகள் யசோதரா ஆற்றுப்படுத்த சோகத்தில் உள்ளார்.

இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தும் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியும் டிவீட் செய்து வருகின்றனர். 2016 ஆம் ஆண்டில், சோனாலி போகத் ‘அம்மா: ஏக் மா ஜோ லகோன் கே லியே பானி அம்மா’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அவர் 2019 இல் ‘தி ஸ்டோரி ஆஃப் பத்மாஷ்கர்’ என்ற வலைத் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். 2020 ஆம் ஆண்டில், ஹிசாரில் உள்ள மார்க்கெட் கமிட்டி அதிகாரியை தாக்கியதற்காக அவர் சர்ச்சையில் சிக்கினார்.