பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படத்தின் பாடல்கள்! லியோ படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

0
194
#image_title

பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படத்தின் பாடல்கள். லியோ படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் பற்றி தகவல் கிடைத்துள்ளது. லியோ படத்தின் பாடல்கள் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சான்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி, பிக்பாஸ் அபிராமி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மாஸ்டர், விக்ரம் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கு மத்தியில் லியோ படத்தை பற்றி வெளியான இந்த தகவல் லியோ படத்தின் மீது எதிர்பார்ந்பை அதிகரித்துள்ளது.

அந்த தகவல் என்ன என்றால் லியோ திரைப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் உள்ளது. இந்த மூன்று பாடல்களில் ஒரு பாடல் காஷ்மீரில் 2000 டேன்ஷர்ஸ்க்கு மத்தியில் படமாக்கப்பட்டுள்ளது என்றும் 2000 டேன்ஸர்ஸ்க்கு மத்தியில் படமாக்கப்பட்டுள்ள பாடல் மான்டேஜ் பாடல் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் சிறியதாக ஒரு பாடல் மட்டும் வரும். பின்னர் கைதி படத்தில் பாடல்கள் இல்லாமல் இயக்கி ஹிட் கொடுத்தார். பிறகு இயக்கிய விக்ரம் படத்தில் சில பாடல்களை வைத்து ஹிட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திலும் பாடல்களை வைத்துள்ளார்.

Previous articleடாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படம்! இயக்குநர் இவர்தான்!
Next articleஎங்களுக்கு துப்பாக்கி வேண்டும்! VAO அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து முதல்வருக்கு கடிதம்!