சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணமா? என்ற கேள்விக்குஅண்மையில் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார் சோனியா அகர்வால்.
இவர் தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் அதன் பின் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களிலும் நடித்தார்.
இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால் அவர்களின் திருமணம் நீண்ட நாட்கள் நிலைக்காமல் விவாகரத்து முடிந்தது.
சினிமாவில் தொடர்ந்து படவாய்ப்புகள் வராத நிலையில் சொந்த தொழில் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில் சோனியா அகர்வால், திருமணம் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை சிலருடன் இணைந்து தொடங்கியுள்ளார்.
சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படத்தை இயக்கியுள்ள ஆனந்த் பால்கி, ஃபேஷன் டிசைனர் ஷிட்னி, ‘சமையல் சமையல்’ வெங்கடேஷ் பட், பிரியா ஆகியோருடன் இணைந்து இதைத் தொடங்கி உள்ளார்.
இந்த தொழிலுக்கே அவர் விளம்பரம் செய்து கொண்ட நிலையில் அவரின் இரண்டாவது திருமண பற்றிய கிசுகிசுக்கள் பரவுவதற்கு முன்னதாக “எனது இரண்டாவது திருமணம் நடக்க இருந்தால் தானே முதல் ஆளா வந்து அறிவிப்பேன்” என்று பேட்டியளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.