திடீரென சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

Photo of author

By Parthipan K

திடீரென சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

Parthipan K

புதுடில்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி இன்று இரவு 7 மணிக்கு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், அவர் அனுமதிக்கப்பட்ட தில்லி கங்கா ராம் மருத்துவமனையின் நிர்வாகக் குழுத் தலைவர் மருத்துவர் டி.எஸ். ராணா அவர் நலமுடன் உள்ளார் என தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்களுடனான கூட்டத்தில் சோனியா காந்தி இன்று பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல் 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல் என்னவென்று ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்தார்.