மக்களின் மனதில், பாலிவுட் வில்லன் இப்போ ஹீரோ ஆன கதை?

Photo of author

By Parthipan K

மக்களின் மனதில், பாலிவுட் வில்லன் இப்போ ஹீரோ ஆன கதை?

Parthipan K

 

பாலிவுட்டில் பிரபல நடிகராக திகழும் சோனு சூட். ஹிந்தியில் ஹிந்தியில் மட்டுமல்லாமல்  பல்வேறு மொழிகளிலும்  நடித்துள்ளார். தமிழில் இவர் அருந்ததி படத்தில் வில்லனாக நடித்து தமிழ் மக்களுக்கு  பரிச்சயமானார்.

தற்பொழுது,இவர் கொரோனா  தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை புரிந்து வருகிறார். இவர் அண்மையில் தன் மகளை வைத்து ஏர் பூட்டி விவசாயிக்கு ஒரு ட்ராக்டர் வாங்கி நன்கொடையாக அளித்துள்ளார். அதன்பின் வேலை இழந்த பெண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்தார்.

இதுபோன்று உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு குழுவை அமைத்து அதன் மூலம் மக்களுக்கு தேவையான உதவிகளைஉடனடியாக கிடைக்கும்படி செய்தார் .

தற்பொழுது மூன்று லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மூன்று குழந்தைகளை தத்தெடுத்துள்ளார்.

இது போன்று பல உதவிகளை செய்து வரும் நல்ல மனம் கொண்ட சோனு சூட், மக்கள் மனதில் மாமனிதன் போல் காட்சியளிக்கிறார்.