நிஜ வாழ்வில் ஹீரோவாக வலம் வரும் சோனு சூட்! என்ன செய்தார் தெரியுமா?

0
169
Sonu Suite is a real life hero! Do you know what he did?
Sonu Suite is a real life hero! Do you know what he did?

நிஜ வாழ்வில் ஹீரோவாக வலம் வரும் சோனு சூட்! என்ன செய்தார் தெரியுமா?

சோனு சூட் என்றாலே நமக்கு நினைவில் வருவது அருந்ததி படம் தான். ஏனென்றால் அப்படத்தில் நெகட்டிவ் ரோலில் சோனு சூட் நடித்திருப்பார். இவரது நடிப்பில் நெகட்டிவ் ரோல் நடித்தாலும் இவர் நிஜவாழ்வில் ஹீரோவாக உள்ளார். உதவி தேடி வருவோருக்கு தன்னால் இயன்றதை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில் இந்த கொரோனா காலகட்டத்தின் போது ஆக்சிஜன் பற்றாக் குறையினால் மக்கள் அதிக அளவு பாதிப்பை சந்தித்தனர்.

அப்பொழுது தனது சொந்த செலவிலேயே மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வாங்கி கொடுத்தார். இன்றுவரை அடித்தட்டு மக்களுக்கும் உதவி தேடி வருபவர்களுக்கும் தொடர்ந்து தன்னால் இயன்றதை செய்து வருகிறார். இவர் தமிழில் அருந்ததி படத்திற்கு பிறகு தமனா  பிரபுதேவா நடித்த தேவி படத்தில் சோனு சூட் நடித்தார். மேலும் இவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. உடல் ஊனமுற்றோர், மருத்துவ உதவி தேடி வருவோர் ,பள்ளிகள் என அனைத்திற்கும் உதவி செய்து வருவதை  இவரது வழக்கமாக உள்ளது.

அதற்காகவே இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்பொழுது 1000 மிதிவண்டிகளை பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தந்துள்ளார். இதனால் இவரை நாட்டின் கதாநாயகன் என்று கூறுவது  ட்விட்டர் பக்கத்தில் அதிக அளவில்  வைராலகி  வருகிறது.நேற்று பஞ்சாப் மாநிலத்தில் மோகம் என்னும் ஊரில் சோனு சூட் அவர்கள் ஆயிரம் மிதிவண்டிகளை பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு வழங்கினார். இதனால் இவரை ,ரியல் ஹீரோ இவர் தான் இன்றும் மக்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.திரைத்துறைக்குள் வந்து சில லட்சம் பணம் சம்பாதித்த உடன் தன் வாழ்க்கையை ஆடம்பரமாக்கி கொள்ளும் இந்த காலகட்டத்தில் சிரமப்படும் மக்களுக்கு உதவி செய்து வரும் இவரைப் போன்றோர் ரியல் ஹீரோக்கள் தான்.

Previous articleதினமலர் நாளிதழ் நிரூபரை தாக்கிய திமுக! மீண்டும் தலைதூக்கும்  ரௌடிசம்!
Next articleகுன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய குழு வெளியிட உள்ளதாக தகவல்!