சோனி லைவ் ஓடிடி தளத்தை கலக்கும் ஸ்கேம்-2003 !!

Photo of author

By Parthipan K

சோனி லைவ் ஓடிடி தளத்தை கலக்கும் ஸ்கேம்-2003 !!

Parthipan K

சோனி லைவ் ஓடிடி தளத்தை கலக்கும் ஸ்கேம்-2003

சோனி லைவ் ஓடிடி தளத்தில் 30,000 கோடி ரூபாய் அளவுக்கு போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் மரணமடைந்த அப்துல் கரீம் தெல்கி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் வித்தாக “ஸ்கேம் சீசன்-2” வெளியாகி உள்ளது. “ஸ்கேம் -2003” என்ற பெயரிடப்பட்ட வெப்சீரியஸ் வெளியாகி கொஞ்ச நாட்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த வெப் சீரியஸ் வெளியாகி உள்ளது.

தற்போது ஓடிடி தளங்களில் முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களும் அவர்கள் நடித்த வெப்சீரியஸ் வீடியோக்களும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கொரோனா ஊரடங்குக்குப் பிறகு 2020ஆம் ஆண்டு முதல் இந்திய முழுவதும் ஓடிடி தளங்கள் தான் ராஜாவாக திகழ்ந்து வருகிறது. மாதம் இல்லையா? ஆறு மாதங்கள் இல்லையா? ஒரு வருடம் என சில நூறு ரூபாய்களை மட்டும் செலுத்தினால் போதும் சப்கிரைப் செய்து அந்த தளத்தில் உள்ள அனைத்து வீடியோக்களையும் பார்த்து விடலாம்.

சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்கேம்-1992 (சீசன்-1) வெப் சீரியஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் வெளியான ஸ்கேம்- 2003 (சீசன் 2) வெப் சீரியஸ் நாடு முழுவதும் மக்கள் ஆதரவை பெற்றுள்ளது.

போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைதாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அப்துல் கரீம் தெல்கி அவர்களின் மோசடி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது.