விரைவில் குரூப் 1 தேர்வு.. பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு டிவிட்டர்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை? 

0
333
Soon group 1 exam.. Bamaka founder Ramadas sensational twitter!! Action taken by the Tamil Nadu government?
Soon group 1 exam.. Bamaka founder Ramadas sensational twitter!! Action taken by the Tamil Nadu government?

விரைவில் குரூப் 1 தேர்வு.. பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு டிவிட்டர்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை?

தமிழக அரசின் வருவாய் துறையில் தற்பொழுது காலி பணியிடங்கள் அதிக அளவு தட்டுப்பாடாக உள்ள நிலையில் உடனடியாக குரூப்-1 தேர்வை அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,

தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 துணை ஆட்சியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதனால் வருவாய் நிர்வாகம் சார்ந்த பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.

டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி தேர்வுகளை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தாதது, வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியராகவும், துணை ஆட்சியர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலராகவும் பதவி உயர்வு வழங்காதது ஆகியவை தான் இவ்வளவு காலியிடங்கள் ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.

தமிழ்நாடு அரசிற்கு முதுகெலும்பாக திகழ்வது வருவாய்த் துறை தான். அத்துறையில் சுமார் 150 உயர்பதவிகள் காலியாக இருப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இதன் காரணமாக வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தமிழகத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும்.

காலியிடங்களில் சுமார் 100 துணை ஆட்சியர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி தேர்வு மூலம் தான் நிரப்ப முடியும் என்பதால், உடனடியாக அத்தேர்வை அறிவிக்க வேண்டும். அதேபோல், தகுதியான வட்டாட்சியர், துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

வருவாய்துறையில் போதுமான நிர்வாகிகள் இல்லாததால் பல்வேறு பணிகள் தடைப்பட்டு நிற்பதை தடுக்க விரைவில் குரூப் 1 தேர்வு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி பாமக நிறுவனர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Previous articleஇவர்களை பணியில் சேர்த்தால் 50 ஆயிரம் அபராதம் மூன்று ஆண்டு சிறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Next articleசிறுமியிடம் சில்மிஷம் ஆசிரியை உடன் வாக்குவாதம் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்!