“விரைவில் நாம் ஒன்றாக பணி புரிவோம்” அஜித் சொன்ன அந்த வார்த்தை!!

Photo of author

By Vijay

தன் கனவை நினைவாக்கும் – பிரபலம்!
நடிகர் அஜித், த்ரிஷா, பிரசன்னா உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்து வரும் படம் தான் “குட் பேட் அக்லி”.  இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.  மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது . இப் படத்தில் அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்து வருகிறார்.
அது குறித்து அர்ஜுன் தாஸ் வெளியீட்டு உள்ள  பதிவில் கூறியதாவது,  சென்னைக்கு நான் முதல் முதலாக நடிக்க வரும்போது எனக்கு சுரேஷ் சந்திரா அவருடைய குழுவில் பணிபுரிய வாய்ப்பு கொடுத்தார்.

அந்த சமயத்தில் நடிகர் அஜித் உடன் எனக்கும் நெருங்கி பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அவரது படப்பிடிப்புகளில் அவரைப் பார்க்கச் செல்வதில் இருந்து, அவர் ஏதேனும் சந்திப்புகளில் கலந்து கொள்ளச் செல்லும் போது அவருடன் இருப்பது, அவரது படங்களை புரொமோஷன் செய்வது வரை நான் அஜித் உடன் இருந்து இருக்கிறேன். நம்பினால் நம்புங்கள், ‘வீரம்’ படத்தின் டீசரை இணையத்தில் பதிவேற்றியவன் நான் தான். என்று கூறினார்.

மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு அஜித் என்னை அழைத்து அர்ஜுன், நாம் விரைவில் ஒன்றாக பணி புரிவோம் என்று சொன்னது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது தற்போது தான்  “குட் பேட் அக்லி” பட வாய்ப்பு வழியாக நடக்கிறது, என்பது  உண்மையிலேயே மகிழ்ச்சியை தருகிறது ” என நடிகர் அர்ஜுன் தாஸ் குறிப்பிட்டார்.