இந்த செடியை பார்த்துள்ளீர்களா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே.. பல மருத்துவ பலன்களை கொண்ட பழம்..!!

0
354
Soora Pazham
#image_title

Soora Pazham: இந்த செடியை 80ஸ் மற்றும் 90ஸ் பிள்ளைகளுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அதிலும் கிராமங்களில் வளர்ந்தவர்கள் இந்த பழங்களை ருசித்திருப்பார்கள். பலர் இதனை பறித்து விளையாடியிருப்பார்கள். பல மருத்துவ குணங்களை கொண்டது தான் இந்த சூரப்பழம். இந்த செடி பொதுவாக வெப்பமண்டல காடுகளில் அதிகமாக காணப்படுகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த செடிகள் உள்ளன. அதிலும் இந்தியாவில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த செடி மற்றும் இந்த செடியில் உள்ள சூரப்பழத்தின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

சூரப்பழம் மருத்துவ பயன்கள்

சூரப்பழத்தின் செடி புதர் போல் வளரும். இந்த செடி பூ பூத்து காய் வைத்து, கனியாக மாறும். கனிகள் சிறிய பெரிய மிளகு பாேல் கருப்பு நிறத்தில் இருக்கும். இதன் சுவை புளிப்பு கலந்த இனிப்பு சுவையாக இருக்கும். இந்த பழத்தில் நிறைய மருத்துவ பயன்கள் உள்ளது.

இந்த பழத்தில் வைட்டமின் சி மற்றும் கார்போஹைட்ரேட், கால்சியம் உள்ளது. மேலும் இந்த செடி வலி நிவாரணியாகவும் உள்ளது.

இந்த பழங்ளை சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.

இந்த செடியின் பட்டைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனை காலையில் வாயில் ஊற்றி கொப்பளித்து வர வாய்ப்புண், வாய் துர்நாற்றம் நீங்கும்.

மேலும் இந்த காயில் அதிக அளவு கால்சியம் உள்ளதால் இது எலும்புகளுக்கு வலிமை சேர்க்கிறது.

மேலும் இந்த செடி தோல் அழற்சிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

இந்த பழங்களை தினமும் சாப்பிட்டு வயிற்றில் உள்ள புண்கள் குணமடைந்துவிடும்.

இந்த செடியின் இலை, தண்டு, பட்டை, பழங்கள் என அனைத்தும் அல்சர் நோய், ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது.

மேலும் இதன் பட்டைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வர நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

இந்த செடியில் இருந்து எடுக்கப்படும் ஜிசிபைன் சாறுகள் மலேரியா நோய்க்கு எதிராக ஆன்டிபிளாஸ்மோடியல் இன் விட்ரோ என்னும் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

மேலும் படிக்க: இந்த செடியை பார்த்தால் விட்டு விடாதீங்க..!மருத்துவ பயன்கள் அதிகம்..!